காய்ச்சலைக் குறைத்து உடல் சூட்டைத் தணிக்கும் தன்மை அகத்திக் கீரைக்கு உண்டு. குடல் புண், அரிப்பு, சொறிசிரங்கு போன்றவையும் குணமாகிறது. அகத்திக்கீரையை பச்சையாக மென்று சாறினைக் குடித்தால் தொண்டைப் புண் மற்றும் தொண்ட வலி நீங்கும். ரத்தக் கொதிப்பு, பித்தம், மலச்சிக்கல் போன்றவையும் அகத்திக் கீரையால் குறைகிறது.
அகத்திக் கீரையை தண்ணீரில் போட்டு சுண்டக் காய்ச்சி வடிகட்டி காலை, மாலை 100 மில்லி அளவு குடித்துவந்தால் நீர்க்கடுப்பு, எரிச்சல், காய்ச்சல் போன்றவை குணமாகும்.இந்தக் கீரையை நன்றாக வேகவைத்தே உண்ண வேண்டும். வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்றும் தன்மையும் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் தன்மையும் இதற்கு உண்டு.
குளிர்ச்சித் தன்மையும் உப்பு சுவையும் நிறைந்த இந்தக் கீரையை மற்ற சித்த மருந்துகளுடன் சேர்த்து எடுக்கக்கூடாது. ஏனெனில் அந்த மருந்துகளின் வீரியத்தை அகத்திக்கீரை குறைத்துவிடும்.