தற்போது மிகவும் வைரலாக பரவிவரும் கொரோனா வைரஸ் எனப்படும் உயிர்க்கொல்லி நோய் சீனாவில் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அந்த வைரஸ் தற்போது பல்வேறு நாடுகளிலும் பரவி வருவதாக மருத்துவத்துறையினர் தெரிவித்துள்ளனர். சீனாவில் உள்ள வுஹான் நகர உணவுச் சந்தையில் கொரோனா வைரஸ் உருவானதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அங்கிருந்து சீனாவில் உள்ள பல்வேறு நகரங்களுக்கு வைரஸ் தொற்று பரவியதாகவ தெரிவித்துள்ள நிலையில் கிருமி நீக்கம் செய்யும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது அந்த நகரத்தில் ரகசியமாக வாழ்ந்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 நபர்களை அதிகாரிகள் பத்திரமாக மீட்டுள்ளனர்.
இந்நிலையில் அவர்களுக்கு கொரோனா தோற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது இந்நிலையில் அதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் அவர்கள் நால்வருக்கும் கொரோனா தோற்று இல்லை என்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இந்நிலையில் அவர்கள் ஏன் இத்தனை நாட்கள் வெளிவராமல் ரகசியமாக அந்த சந்தையில் தங்கி இருந்துள்ளனர் என கேட்டபோது அதற்கு அவர்கள் எந்த ஒரு பதிலும் அளிக்காத நிலையில் அவர்கள் அந்த சந்தையில் வேலை பார்ப்பவர்கள் என மற்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அவர்களுக்கு தொற்று இருக்கிறதா என அறிய மருத்துவர்கள் அவர்களை பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். இதையடுத்து மருத்துவ அறிக்கை வந்த பிறகு அவர்களுக்கு பாதிப்பு உள்ளதா அல்லது நலமுடன் இருக்கிறார்களா என்பது உறுதி செய்யப்படும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் காரணமாக சீனாவில் உள்ள பல்வேறு பகுதிகளில் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து தொற்று ஏற்படுவதற்கான அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் உடனே மருத்துவரை அணுகும்படியும் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் பெரும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
சீனாவில் மட்டும் கொரோனா தொற்றுநோய்க்கு சுமார் 80,430 பேர் பாதிப்படைந்துள்ளதாகவும் அதில் சிகிச்சை பலனின்றி 3,013 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளுக்கு பரவி வருவதால் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சீனா மற்றும் அதை ஒட்டியுள்ள நாடுகளிலிருந்து யாரும் வெளியே செல்ல முடியாத வகையில் அவர்களுக்கு அங்கேயே பாதுகாப்பளித்து சிகிச்சையளித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வைரஸிற்கு நேற்று ஒரு நாள் மட்டும் சுமார் 32 பேர் பலியாகியுள்ளதாகவும் சீன அரசு தெரிவித்துள்ளது.