எந்த ஒரு புதிய அப்டேட் பயனர்களுக்கு வரும் முன்பு பீட்டா செயலியில் அப்டேட் செய்யப்பட்டு பரிசோதிக்கப்படும். அதன் ஒப்புதல் பெற்ற பின்பு தான் இந்த புதிய அப்டேட் நடைமுறைக்கு மற்ற பயனர்களுக்கு வழங்கப்படும்.
இவ்வாறாக வழங்க படும் பீட்டா அப்டேட் -இல் சில பிரெச்சனைகள் வருவது வழக்கம். அந்த வகையில் தற்போது வெள்ளியாகியுள்ள பீட்டா ஆண்ட்ராய்டு வேர்சின் 2.19.66 அப்டேட் இல் ஒரு பெரிய சிக்கல் எழுந்துள்ளது.
இந்த புதிய பதிப்பில் மீடியா பைல்கள் அனைத்தும் அழிந்துவிட்டதாக இதனை பரிசோதனை செய்த பீட்டா பரிசோதனையாளர்கள் அறிவித்துள்ளனர்.
ஆனால் அழிந்து போன மீடியா பைல்கள் போனின் கேலரியில் பத்திரமாக உள்ளது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆகவே இந்த பதிப்பை எந்த பயனர்களும் அப்டேட் செய்து பயன்படுத்த வேண்டாம் என்று பீட்டா பரிசோதனையாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர் .
இதனை அடுத்து வாட்ஸ் ஆப் நிறுவனம் இந்த பிழையை நீக்கி மீண்டும் ஒரு புதிய பதிப்பை பீட்டா பரிசோதகர்களுக்கு வழங்கியது. அதன் பீட்டா ஆண்ட்ராய்டு வேர்சின் 2.19.67 ஆகும்.
மேலும் இந்த புதிய பீட்டா பதிப்பில் பலரது ஸ்டேட்டஸ் பார்க்க இயலவில்லை அதற்கு பதிலாக கிரே நிறத்தில் ஸ்டேட்டஸ் தெரிவதாகவும் பீட்டா பரிசோதனை பிரிவு கூறியுள்ளது.
ஆகவே பீட்டா பரிசோதனையாளர்கள் ஆண்ட்ராய்டு வேர்சின் 2.19.66 & 2.19.67 ஆகிய இரண்டு பதிப்புகளையும் மற்ற பயனர்கள் யாரும் அப்டேட் செய்து பயன்படுத்துவதை தவிர்க்க பரிந்துரைத்துள்ளது