“கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா” பாடல் மூலம் நம்மை மயக்கிய நடிகை அமலாவின் தற்போதைய ப ரிதாப நிலை ஹைதராபாத் 1980-களில் எல்லோருடைய கனவு கன்னியாக இருந்த நடிகை அமலாவை பற்றி நாம் நிறைய பேசி உள்ளோம் . இவர் அறிமுகமான திரைப்படம் மைதிலி என்னை காதலி 1986-ம் ஆண்டு வெளியானது.
தன்னுடைய இயல்பான நடிப்பாலும் அழகான தோற்றத்தாலும் ரசிகர்களை அதிகம் கவர்ந்து இருந்தாங்க நடிகை அமலா. குண்டான ஹீரோயின்ஸ் பலர் கொடி கட்டி பரந்த பொழுது மிக ஒல்லியான இடையுடன் நடனம் ஆடி தன் ரசிக்கர்களை கவர்ந்து எல்லோரையும் கட்டி போட்டவர் அமலா.
‘மெல்லத் திறந்தது கதவு’, ‘வேலைக்காரன்’, ‘சத்யா’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்தவர் நடிகை அமலா. 90-களின் ஆரம்பத்தில் ஓரிரு படங்களில் நடித்த அமலா, அதன்பின் தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் மட்டும் நடித்து வந்தார். குறுகிய காலகட்டத்தில் பல வெற்றிப் படங்களில் நடித்து இருக்கிறார் நடிகை அமலா.
மைதிலி என்னை காதலி ,மெல்லத் திறந்தது கதவு ,அக்னி நட்சத்திரம் ,மாப்பிள்ளை போன்ற பல வெற்றி படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்திருக்கிறார். இவர் தமிழ் ,தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் நடிச்சிருக்காங்க. இவருக்கு மிகவும் பிடித்த விஷயங்களில் பரத நாட்டியமும் ஒன்று.
அவர் புகழின் உச்சத்தில் இருக்கும் போதே தன்னுடன் சேர்ந்து நடித்த நாகார்ஜுனாவை காதல் திருமணம் செய்து கொண்டார். ஃபைனல்ஸ்க்கு தான் கூப்பிடல இதுக்காவது அழைத்திருக்கலாமே ஆதங்கப்படும் ரசிகர்கள் நாகார்ஜுனா பல வெற்றிப் படங்களில் ஹீரோவாக நடித்தவர் ஒரு முன்னணி கதாநாயகர். திருமணத்திற்குப் பிறகு அமலா சினிமாவை விட்டு விலகி தன்னுடைய வாழ்க்கையை நடத்தினார்.
இவர்களுக்கு நாகா சைதன்யா மற்றும் அகில் என்ற மகன்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே . நடிகை அமலா சமுதாயத்தின் மீது மிகுந்த ஆர்வம் உடையவர். ப்ளூ கிராஸ் ஹைதராபாத் என்ற அமைப்பின் இணை நிறுவனர் ஆவார். நீண்ட இடைவெளிக்கு பிறகு 2012ஆம் ஆண்டில் ‘ லைஃப் இஸ் பியூட்டிஃபுல் ‘என்ற தெலுங்கு படத்தில் அம்மா வேடத்தில் நடித்திருந்தார் நடிகை அமலா. பின்னர் பிரபல தொலைக்காட்சியில் தொடர்களில் நடித்தார். சில நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார். சின்னத் திரையில் அமலாவுக்கு எதிர் பார்த்த வெற்றிகள் கிடைக்கவில்லை.
இப்பொழுது மீண்டும் ஒரு இடைவேளைக்குப் பிறகு ஸ்ரீ கார்த்திக்கின் இயக்கத்தில் பிரபுவின் தயாரிப்பில் உருவாக இருக்கும் தமிழ் படத்தில் ஹீரோவுக்கு அம்மாவாக நடிக்கவிருக்கிறார். இந்த படத்தின் ஹீரோ சர்வானந்த். இவர் தமிழ்த் திரைப்பட உலகில் ராம் என்றும் அழைக்கப்படுகிறார். இவர்தெலுங்கு திரைப்பட நடிகர் ஆவார். இவர் எங்கேயும் எப்போதும் என்ற தமிழ் படத்தில் புதுமுக கதாநாயகனாக அறிமுகமானவர். அமலாவுக்கு இந்த படம் எப்படிப்பட்ட படமாக இருக்கும் என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
தனது மருமகள் சமந்தா ஒரு பக்கம் நடித்து அசதி கொண்டு இருக்கையில் மாமியார் நான் மட்டும் சளைத்தவளா என்ன என்று கேள்வி கேட்கும் வகையில் பல புது கதைகளை தேர்ந்து எடுத்து நடிக்க திட்டம் தீட்டி உள்ளார். ஒரு குடும்பமே இப்படி மாறி மாறி நடிப்பு துறையில் நடித்து கொண்டும் ரசிகர்களை கொண்டாடும் வகையில் செயல் படுவதும் ஆச்சரியமான உண்மை தான்.