டெஸ்டோஸ்டீரான் ஹார்மோனின் தாக்கத்தை புரிந்து கொள்ளும் வகையில் டெஸ்டோஸ்டீரான் சிகிச்சை பெற்றவர்களிடம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் ஆண்களுக்கே பயனளிக்கும் என்று நம்பப்பட்டாலும் சிகிச்சை ஆய்வு முடிவுகள் பெண்களுக்குதான் அதிகம் உதவுவதாக தெரியவருகின்றன. இந்த ஹார்மோன் பெண்களின் பாலியல் வேட்கை, பாலியல் உச்சக்கட்டத்தை அதிகரித்து, தசை வலிமை, மனவோட்டம், வளர்சிதை மாற்ற செயல்பாடு மற்றும் சிந்தனை திறன், ஞாபக சக்தி ஆகியவற்றை மேம்படுத்த உதவுகிறது.
1990 முதல் 2018 ஆண்டுவரையான காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட அறிக்கைகளை ஆய்வு செய்ததில் பெண்களின் மனவோட்டம், லிப்பிடுகள் என்னும் உயிரிமூலக்கூறுகள், மார்பக அடர்த்தி, கூந்தல் வளர்ச்சி ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும் டெஸ்டோஸ்டீரான், பெண்களின் சிந்தனை, எலும்பின் அடர்த்தி, தசை வலிமை மற்றும் உடலில் தாதுக்களின் விகிதம் ஆகியவற்றில் எந்த நன்மையையும் தரவில்லை என தெரியவந்துள்ளது மாதவிடாய் சுழற்சி நின்றுவிட்ட பெண்கள், ஒரு மாதத்தில் பாலுறவு கொள்ளும் வேளைகளை அதிகப்படுத்தியுள்ளதைக் காட்டிலும் கூடுதல் நன்மைகள் விளைந்துள்ளன என ஆஸ்திரேலிய மோனாஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் சிகிச்சை காரணமாக எந்தப் பக்கவிளைவையும் உணரவில்லை என்பதோடு, தனி நபர்களின் இன்சுலின் அளவு, இரத்த அழுத்த அளவு, குளூக்கோஸ் அளவு மற்றும் மார்பக நலத்தில் எந்தப் பாதிப்புகளும் நிகழவில்லை என ஆய்வுகள் கூறுகிறது,