வங்கக் கடலில் வரும் 29ஆம் தேதி புயல் ஒன்று உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயலுக்கு ஃபானி என்று பெயர் சூட்ட படலாம் என்றும் கூறப்படுகிறது. சென்னை கடலூர் இடையே இந்த புயல் கரையைக் கடக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு வீசிய கடும் புயலில் பாதிப்புகளில் இருந்து தமிழகம் மீண்டு வரவில்லை. இந்த நிலையில் மீண்டும் ஒரு செயல் என்பதால் தமிழக மக்கள் மத்தியில் பீதி நிலவுகிறது. இந்த நிலையில் புதிதாக உருவாக இருக்கும் புயல் தமிழகத்தை தாக்காது என்று பிரபல வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
புயல் உருவாகி சென்னையை நோக்கி வந்தாலும் அது விலகி ஆந்திர மாநிலம் ஓங்கோல் மற்றும் விசாகப்பட்டினம் இடையேதான் கரையை கடக்கும் என்று செல்வகுமார் கணித்துள்ளார். புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 225 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த புயலால் தமிழகத்துக்கு ஆபத்து இல்லை என்று செல்வகுமார் கணித்துள்ள நிலையில் கடந்த முறை கையினால் டெல்டா மாவட்டங்களில் பாதிப்பு ஏற்படும் என்று செல்வகுமார் சரியாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.