எண்ணெய் குளியல் போட்டால் உடல் நாற்றம் தீருமா?
ஆனால் இன்றைய நவீன நாகரிகயுகத்தில் தீபாவளி அன்று மட்டுமே எண்ணெய் குளியல் நடைபெறுகிறது. தலைக்கு எண்ணெய் வைப்பதும் தேவையில்லை எனும் அளவுக்கு நாகரிகம் வளர்ந்திருக்கிறது. · சீரகம் சேர்த்து காய்ச்சிய நல்லெண்ணெய் தேய்த்துக் குளித்தால் உடல் சூடு, தூக்கமின்மை பிரச்னைகள் குறையும். · மன அழுத்தம், படபடப்பு, டென்ஷன் போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் எண்ணெய் குளியல் போட்டால் பிரச்னை தீரும். · தோல் நோய் குறைந்து சரும ஆரோக்கியம் மேம்படுவதற்கும், உட்ல் பளபளப்படையவும் எண்ணெய் குளியல் பயன்படுகிறது. · உடல் முழுவதும் எண்ணெய் தடவுவதால் ரத்த ஓட்டம் சீரடைகிறது. மேலும் உடல் நாற்றம் போன்ற பிரச்னைகள் தீருகிறது. எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது மட்டும் வெந்நீர் குளியல் நல்லது. மேலும் எண்ணெய் குளியல் அன்று கடினமான வேலைகளை செய்யக்கூடாது....