புருவத்திற்கு மை தீட்டுவது எப்படின்னு தெரியுமா?
கை விரல்களால் மை தொட்டு போடுவது புருவ அழகைக் கெடுத்துவிடும். ஐப்ரோ பென்சிலை எவ்வளவு மெல்லியதாக முடியுமோ அவ்வளவு மெல்லியதாகப் பயன்படுத்தவும். உட்புறமிருந்து வெளிப்புறமாகத்தான் பென்சிலால் புருவம் தீட்ட வேண்டும். ஒவ்வோர் இழையாக இட, இப் புருவம் பொலிவு பெறும். அழுத்தமான தடித்த கோடுகள் போட்டால், தூரத்தில் இருந்து பார்க்கும்போதே, அவை செயற்கையாக வரையப்பட்ட புருவம் என்று காட்டிக் கொடுத்துவிடும். பிரஷ் செய்யவதாக இருந்தாலும் முதலில் வெளிப்புறமிருந்து உட்புறமாகவே பிரஷ் செய்ய வேண்டும். அப்போதுதான் புருவத்துக்கிடையில் படிந்திருக்கும் பவுடர் போன்றவை நீங்கும். பிறகு பிரஷை ஒரு டிஷ்யூ பேப்பரால் சுத்தம் செய்த பிறகு கீழிருந்து மேலாக தொடர்ந்து உள்ளிருந்து தொடங்கி வெளிப்புறமாக அதாவது புருவத்தின் போக்கில் பிரஷ் செய்தால் மிக நன்றாக அமைந்துவிடும்....