கர்நாடகாவின் சிறப்பு சுற்றுலா அம்சங்கள்! ஊர் சுற்றலாம் வாங்க! பகுதி – 1
டூர் ஐட்டனரி முதல்நாள்- மே 15 புதன்கிழமை இரவு நாம் சென்னை டூ பெங்களூர் AC Sleeper Coach பஸ் மூலம் கிளம்புவோம். இரண்டாம்நாள்- மே 16 வியாழக்கிழமை . காலை உணவை உண்டபின்னர். 1] மல்லேஸ்வரம் சிவன் கோவிலை தரிசனம் செய்வோம். இந்த கோவில் 7 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் என்று அகழாய்வு துறையினரால் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டு இருக்கு. இந்த கோவிலின் ஒரு சிறப்பு என்னவென்றால் அணைத்து சிவன் கோவில்களிலும் மூலவர் சந்நிதிக்கு எதிரே இருக்கும் நந்தீஸ்வரர் இங்கே மூலவர் சந்நிதிக்கு மேலே இருக்கிறார். நந்தி வாயிலிருந்து 365 நாட்களும் தீர்த்தம் சிவலிங்கத்தின் மீது கொட்டி கொண்டே இருக்கும். ஆந்திராவில் உள்ள ராமகிரி பைரவர் கோவிலிலும் நந்தி வாயில் இருந்து 365 நாட்களும் நீர் கொட்டி கொண்டே இருக்கும். ஆனால் அந்த கோவிலில் ஊற்று நீர் வரும் இடத்தில் நந்தீஸ்வரர் விக்ரஹத்தை பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். அந்த நீர் குளத்தில் தான் கொட்டும். . இங்கோ மூலவர் சந்நிதிக்கு மேலே நந்தீஸ்வரர் இருக்கிறார். மல்லேஸ்வரம் கோவிலில் நந்தி வாயிலிருந்து வரும் நீர் எங்கிருந்து வருகிறது என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. தொடர்ந்து 7 ஆயிரம் ஆண்டுகளாக இந்த அதிசயம் நடந்து கொண்டிருக்கிறது. அந்த கோவிலை நாம் தரிசித்த பின் 2] பெங்களூர் அரண்மனையை பார்வை இடுவோம். மைசூர் அரண்மனை நம் அனைவருக்குமே தெரியும். பெங்களூரில் ஒரு அருமையான அரண்மனை இருக்கிறது. 1873 இல் மைசூர் மன்னர் சாமராஜேந்திர உடையாரால் இந்த அரண்மனை கட்டப்பட்டது. அதன் பிறகு நாம் இயற்கை அழகு மிக்க பெங்களுர் 3]லால் பாக் கார்டனை பார்வை இடுவோம். 240 ஏக்கரில் பலநூறு வண்ண மலர்கள் பூத்து குலுங்கும் இந்த லால்பாக் கார்டன் ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தானால் உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் சுமார் 300 ஏக்கர்,பரப்பளவில் 6 ஆயிரம் அறிய வகை மரங்கள். என ரம்யமான சூழ்நிலையில் அமைந்திருக்கும் 3] Cubbon Park. கை பார்வை இடுவோம். Sir John Meade எனும் வெள்ளை காரரால் உருவாக்கப்பட்டது இந்த Cubbon Park. 4] திப்பு அரண்மனையை சுற்றி பார்த்து 5] இஸ்கான் கோவிலை தரிசித்த பின் மாலையில் 6] ஷாப்பிங் செய்வோம். மூன்றாம் நாள்- மே 17 வெள்ளிக்கிழமை பெங்களூர் ரூமை செக் அவுட் பண்ணிண்டு நாம் பெங்களூர் டூ மங்களூர் பஸ்ஸில் பயணம் செய்வோம். சென்னை டூ பெங்களுர் என்ன தூரமோ அதே தூரம் தான் பெங்களூரில் இருந்து மங்களூருக்கு. பெங்களுர் டூ மங்களூர் நேராக செல்ல சுமார் 6 லிருந்து 7 மணிநேரம் ஆகும். பெங்களுர் டூ மங்களூர் செல்லும் வழியில் தான் உலக புகழ்ப்பெற்ற 7]குக்கே சுப்ரமண்யா கோவில் இருக்கிறது. மயில் வாகனனான முருகப்பெருமானை நாக வடிவத்தில் கர்நாடக மக்கள் வழிபடுவார்கள். ராகு, கேது தோஷத்திற்கு மிக சிறந்த பரிகார தலமாக கருதப்படும் குக்கே சுப்ரமண்யா முருகனை நாம் தரிசித்து விட்டு பின்னர் அங்கிருந்து நேராக 8] மங்களூர் பீச்சிற்கு செல்வோம்...