பிரசவம் முடிந்ததும் பெண்ணுக்கு மார்பகத்தில் வலி வருவது ஏன்?
தாய்க்கு உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம் மற்றும் ரத்தவோட்ட மாறுபாடு காரணமாக உடலில் நடுக்கம், காய்ச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். பால்சுரப்பு ஏற்படுவதால் முதல் வாரத்தில் மட்டும் மார்பகங்களில் லேசான வலி இருப்பதற்கு வாய்ப்பு உண்டு. உடலில் கர்ப்பகாலத்தில் சேகரிக்கப்பட்ட அதிக நீர், தாது உப்புக்கள் வெளியேறுவதால் அடிக்கடி சிறுநீர் கழிக்கவேண்டிய தொந்தரவு ஏற்படலாம். பிரசவத்த பிறகு போதுமான உணவு சாப்பிடுவது தண்ணீர் குடிப்பதில் தாய்க்கு ஆர்வம் இருக்காது என்பதால் மலச்சிக்கல் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. இதுபோன்ற பிரச்னைகள் எல்லாமே ஒரு வாரத்தில் சரியாகிவிடும் என்பதால் தனியே சிகிச்சை எடுக்கவேண்டிய அவசியம் இருக்காது. ஆனால் அதிக வேதனை, சிக்கல் தென்பட்டால் தயங்காமல் மருத்துவரை அணுகவேண்டும்....