உலகளாவிய பொருளாதார சுணக்கத்தால் பல்வேறு நாடுகளிலும் தொழில் மந்தநிலை ஏற்பட்டுள்ளது. பொருட்கள் விற்பனை குறைவு, வர்த்தகம் வாய்ப்புகள் வீழ்ச்சி என அடுத்தடுத்து பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
டிசம்பர் மாத தொடக்கத்தில் இறங்கியிருந்த தங்கம் விலை ஒரே நாளில் டிசம்பர் 4ஆம் தேதி ஒரு சவரனுக்கு ரூ.296 ஆக உயர்ந்தது.. அதன் பிறகு தங்கம் விலையில் இறக்கம் ஏற்பட்டது. ஆனால் மீண்டும் இன்று ஒரு சவரனுக்கு ரூ.184 அதிகரித்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி ஆபரண தங்கத்தின் விலை 1 கிராமுக்கு ரூ. 3,780 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ. 30,240 ஆகவும், 22 கேரட் தங்கத்தின் விலையானது 1 கிராமுக்கு ரூ.3,600 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ. 28,800 ஆகவும் இருந்தது.
ஆனால் இன்று சவரனுக்கு ரூ. 184 அதிகரித்து 22 கேரட் தங்கத்தின் விலையானது ஒரு கிராமுக்கு ரூ. 3,622 ஆகவும் ஒரு சவரன் தங்கத்தின் விலையானது ரூ.28,976 ஆகவும் இன்று விற்பனை செய்யப்படுகிறது.. அதேபோல் 24 கேரட் தங்கத்தின் விலையானது ஒரு கிராம் ரூ.3,803 ஆகவும் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 30,424 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்று சென்னையில் 22 கேரட் மற்றும் 24 கேரட் தங்கத்தின் விலை நிலவரம் கீழ்வருமாறு:
14.12.2019 – 1 grm – Rs. 3803/-, 8 grm – 30,424/- ( 24 கேரட்)
14.12.2019 – 1 grm – Rs. 3622/-, 8 grm – 28,976/- (22 கேரட்)
வெள்ளி விலை இன்று கிராமுக்கு 47.30 ஆகவும் கிலோ ரூ.47,300 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது..