தூக்கம் என்பது வயதிற்கேற்ப மாறுபடும்… யார் யார் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் என்பதை கீழே உள்ள அட்டைவனையில் குறிப்பிட்டுள்ளேன்… தூக்கம் என்பது மனிதர்களுக்கு மிகமிக அவசியமான ஒன்று. இரவு சரியாகத் தூங்கவில்லை என்றால் மறு நாள் முழுவதும் அலுப்பாக இருக்கும். வேலையில் மனம் ஒட்டாது.
தூக்கம் மனிதர்களுக்கு ஆயுளை நீட்டிக்கிறது. மன மகிழ்ச்சியை உண்டாக்குகிறது. மேலும் வலி நிவாரணியாக செயல்படுகிறது. நாம் அனைவரும் அன்றாடம் தவறாமல் மேற்கொள்ள வேண்டிய முக்கியமான பழக்கங்களுள் ஒன்று தான் தூக்கம். அதே தூக்கத்தை அளவுக்கு அதிகமாக மேற்கொண்டால் எதிர்மறையனான விளைவுகளை சந்திக்க நேரிடும். அவற்றையும் கீழே குறிப்பிட்டுள்ளேன்.
சர்க்கரை நோய், உடல் பருமன், தலைவலி, முதுகு வலி, மன அழுத்தம், இறுதியில் மரணம் ஆம், மரணம்… தினமும் இரவு ஒன்பது அல்லது அதற்கு மேலாக தூங்குபவர்கள், 7-8 மணி நேரம் தூங்குபவர்களை விட, விரைவிலேயே இறக்கிறார்கள் என்று பல ஆய்வுகள் கூறுகிறது
அதிக நேரம் தூங்க விரும்பினால், அதிக நேரம் படுக்கையில் இருக்க விரும்புகிறோம் என்று அர்த்தம். இதை விட சுலபமாக இதை சொல்ல முடியாது. ஒரு வகையில் நிஜத்தை சந்திக்க தைரியம் இல்லாதவர்கள் கையாளும் வழி தான் இது. ஆகவே அதிக நேரம் தூங்க வேண்டும் என்று ஆசைபட்டால், எமனை சந்திக்க வேண்டியிருக்கும் என்று நினைத்தால், நீண்ட நேர தூக்கத்தில் இருந்து விடுபடலாம்…