குங்குமப்பூவின் பூர்வீகம் மத்திய ஆசியா என்று கணக்கிடப்பட்டுள்ளது. சுமார் 150 பூக்களை சேகரித்தால் அவற்றில் இருந்து 1 கிராம் குங்குமப்பூ மட்டுமே பெறமுடியும். குங்குமப்பூவின் சுவை கசப்பு ஆகும்.
·
குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாக பிறக்கும் என்று சொல்லப்படுவதில் எந்த உண்மையும் இல்லை.
·
சிவப்பழகு கிரீம்களுக்குப் பதிலாக குங்குமப்பூ பயன்படுத்தினால் முகத்தில் புத்துணர்ச்சியும் அழகும் மேன்மையுறும்.
·
ரத்தத்தை உடலின் அனைத்து பாகங்களுக்கும் கொண்டுசெல்வதற்கும், ஜீரணம் நன்றாக நடைபெறவும் குங்குமப்பூ பயனுள்ளதாக இருக்கிறது.
·
குங்குமப்பூவை பாலுடன் கலந்து குடித்துவந்தால் பெண்களின் தோல் மற்றும் முடியின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
ஒரிஜினல் குங்குமப்பூவின் விலை அதிகம் என்பதால், மார்க்கெட்டில் போலி நிறையவே கிடைக்கிறது. போலியை சாப்பிடுவது உடல் நலனுக்கு கெடுதி என்பதால் எச்சரிக்கையாக தேர்வு செய்யவேண்டும்.