மஞ்சள், ரோஸ் நிறங்களில் எளிதில் விளையக்கூடிய பரங்கிக்காய் சமையலுக்கும், அதன் விதை மருத்துவத்திற்கும் பயன்படுகிறது. இனிப்பான சுவை கொண்டது என்பதால் இதனை சர்க்கரை பூசணி என்றும் சொல்வார்கள்.
• வைட்டமின் ஏ சத்து அளவுக்கு அதிகமாக பரங்கிக்காயில் இருப்பதால், இயற்கையான ஆன்ட்டி ஆக்சிடென்ட்டாக செயலாற்றுகிறது பரங்கிக்காய்.
• குளிர்ச்சி தன்மை நிரம்பியிருப்பதால் உடம்பு சூடு நீங்குவதுடன் பித்தம் நீங்கும். உடல் எரிச்சல் தீரும்.
• பரங்கிக்காயில் கெராட்டினாயிட்ஸ் அதிகம் இருப்பதால், உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு துணை நிற்கிறது.
• சருமத்திற்குத் தேவையான கொழுப்பு அமிலமும், சரும பளபளப்புக்குத் தேவையான வைட்டமின் ஈ, துத்தநாகம், மக்னீசியமும் பரங்கிக்காயில் நிரம்பியுள்ளன.
பரங்கிக்காயிலும் விதையிலும் பல்வேறு மருத்துவக் குணங்கள் நிரம்பியுள்ளதால் ஜீரணம், ரத்த சுத்திகரிப்பு, சுவாசம் போன்றவை சரவர நடைபெற செயலாற்றுகிறது.