• தசை மற்றும் திசுக்களின் வளர்ச்சிக்கும் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் புரோட்டீன் எனப்படும் புரதங்கள் பயன்படுகிறது. ஒருவருக்கு தினமும் 50 முதல் 60 கிராம் வரை புரோட்டீன் தேவைப்படுகிறது.
• புரோட்டீன் டயட் இயல்பாகவே பசியை குறைக்கும் தன்மை கொண்டது. அதனால் உணவு உட்கொள்வது குறைவதால், எடையை வெகுவாக குறைக்கிறது.
• புரோட்டீன் டயட் எடுத்துக்கொள்ளும்போது உடலுக்கு குறைந்த அளவு கலோரியே கிடைப்பதால், கூடுதல் கலோரிக்காக உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்பு கரையத் தொடங்கி, உடலின் எடை குறைகிறது.
• தினமும் 2 அல்லது 3 முறை புரத உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம். அப்போதுதான் உடலுக்கு புரதப்பற்றாக்குறை ஏற்படாது.
பயிறு மற்றும் பருப்பு வகைகளிலும் இறைச்சி, முட்டை, பால், சீஸ், மீன் உணவுகளிலும் நிறைய புரோட்டின் இருக்கிறது. புரோட்டீன் உணவுகளை தொடர்ந்து எடுத்துக்கொள்வது உடல் எடையை குறைப்பதில் நல்லமுறையில் பலனளிக்கிறது.