சில குழந்தைகள் அடிக்கடி வாந்தி எடுத்துக்கொண்டே இருப்பார்கள். உணவு உண்ட பிறகு, பால் குடித்த பிறகு என வாந்தி எடுக்கும் பிரச்னை இருக்கும். இந்த பிரச்னை ஏன் ஏற்படுகிறது? தடுக்க வழிகள் இருக்கிறதா? விளக்கமாகப் பார்க்கலாம்.
முதலில் வாந்தி எடுப்பதற்கும் ஸ்பிட்டிங் அப் (குமட்டிக்கொண்டு துப்புவது போல) இந்த இரண்டு பிரச்னைக்கு வேறுபாடுகள் இருக்கின்றன.
வயிற்றிலிருந்து வேகமாக வாய் வழியாக வெளியேறுவது, வாந்தி எனப்படும்.
ஸ்பிட்டிங் அப் என்பது 0-1 வயது குழந்தைகளுக்கு பரவலாகக் காணப்படும் ஒரு பிரச்னை. வயிற்றில் உள்ளவை ஏப்பம் மூலமாக, வாய் வழியாக வெளியேறுவது.
வாந்தி எப்படி வரும்?
வயிற்று தசைகள், டயாபிராகம் எனும் இரண்டும் அதீதமாக வேலை செய்து வலுகட்டாயமாகக் கழிவுகளை வெளியேற்றும் நிலை, வாந்தி.
வயிற்றில் அடைப்பு, வீக்கம், எரிச்சல், தொற்று, கேஸ்ட்ரோ இன்டஸ்டினல் ட்ராக்டில் எரிச்சல் இருந்தால் வாந்தி வரலாம்.
ரத்தத்தில் கெமிக்கல் இருப்பது (மருந்துகள்)
மனரீதியாகத் தூண்டுதல் – துர்நாற்றம், பிடிக்காத விஷயத்தால் வாந்தி வருவது
நடு காது மையத்தில் உள்ள பிரச்னை (மலம் கழிப்பதில் பிரச்னை)
Image Source : Beauty Tips
வாந்தி வரக் காரணங்கள்…
கை குழந்தைகளுக்கு ஃபார்முலா மில்க் அல்லது தாய்ப்பால் குடித்த பின் குழந்தைகள் ‘ஸ்பிட் அப்’ செய்வார்கள்.
இது இயல்பான விஷயம், குழந்தைகள் பொதுவாக ஏப்பம் விடும்போது சிறிதளவு ஸ்பிட் செய்வது சாதாரணமான விஷயம்தான்.
குழந்தை வளர வளர இந்த ஸ்பிட் அப் பிரச்னைத் தானாக சரியாகிவிடும்.
10-12 மாத குழந்தைகளாக வளரும்போது தானாக குழந்தைகள், இந்த ஸ்பிட் அப் பிரச்னையிலிருந்து வெளி வருவார்கள்.
ஸ்பிட்டிங் அப் பிரச்னையைப் பார்த்துப் பயப்பட வேண்டாம்.
மிகவும் இயல்பற்ற நிலையில், வலுகட்டாயமாக ஸ்பிட் அப் அல்லது வாந்தி எடுப்பதைத் தொடர்ந்து செய்வது போன்ற அறிகுறிகள் இருந்தால் மட்டுமே மருத்துவரிடம் குழந்தையை அழைத்து செல்லுங்கள்.
குழந்தை பால் குடிக்கவோ உணவு சாப்பிடவோ அவஸ்தை பட்டால் நிச்சயம் நீங்கள் மருத்துவரிடம் காண்பிப்பது நல்லது.
ஈஸோபேகல் ரிஃப்லக்ஸ்
உணவுக் குழாய் மூலமாக குமட்டி கொண்டு வாந்தி எடுப்பது, ஏப்பம் வருவது போன்ற பிரச்னையால் தொடர்ந்து பாதிக்கப்பட்டால் மருத்துவரை அணுகுங்கள்.
குழந்தைக்கு கொடுக்கும் உணவைக் கொஞ்சம் திக்காக, கெட்டியான கூழ் வடிவில் கொடுக்கலாம்.
அதிகமாக உணவுக் கொடுப்பதைத் தவிர்க்கலாம்.
கொஞ்சம் கொஞ்சமாக உணவுகளை நிறைய முறை கொடுக்கலாம்.
குழந்தை ஏப்பம் விட வசதியாக, சாப்பிட்ட பின் லேசாக முதுகைத் தட்டுங்கள்.
உணவு உண்ட பிறகு, அமைதியான, பாதுகாப்பான, நிமிர்ந்த நிலையில் 20-30 நிமிடங்கள் குழந்தையை வைத்திருங்கள்.
இதையும் படிக்க: குழந்தையின் வயிறு வலியை நீக்கும் வீட்டு வைத்திய முறைகள்…
வாந்தி, குமட்டலைத் தடுக்கும் வீட்டு வைத்திய முறைகள்…
இங்கு சொல்லப்படும் கைவைத்தியங்கள் குழந்தைகளுக்கு ஏற்றது. இது கொடுக்கலாமா அது கொடுக்கலாமா குழப்பிக் கொள்ளாமல் எது கொடுத்தாலும் சரியான அளவில் மருந்தாகக் கொடுக்கும் போது குழந்தையை எந்த விதத்திலும் பாதிக்காது. உணவே மருந்து. மருந்தே உணவு… சின்ன குழந்தைக்கு இது சரியா, அது சரியா எனக் குழப்பிக்கொள்ள வேண்டாம். மருந்தை அளவாகத் தருவதில் தவறில்லை.
லேசான வெஜிடெபிள் சூப், கிளியர் சூப், ஜூஸ், கஞ்சி, கூழ் போன்ற திரவ உணவுகள் அதிகமாகக் கொடுக்கலாம்.
எந்த உணவு கொடுத்தப் பின்னும் உடனடியாகப் படுக்க வைக்க கூடாது.
சின்ன துண்டு இஞ்சியை நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். அதில் இருந்து சாறை எடுத்துக் கொள்ளுங்கள்.அந்த சாறில் சிறிது தேன் கலந்து குழந்தைக்கு கொடுக்கலாம். இஞ்சியும் தேனும் செரிமானத்துக்கு உதவும்.
Image Source : Prima Oliva
இதையும் படிக்க: குழந்தைக்கு வரும் விக்கல் எப்படி சரிசெய்வது? தவிர்க்கும் வழிகள்…
வாந்தி, குமட்டலை தீர்க்க புதினாவுக்கு சிறப்பான ஆற்றல் உண்டு. ஃப்ரெஷ்ஷான புதினா இலைகளை எடுத்து, அரைத்து, ஜூஸ் எடுக்கவும். அதனுடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்க்கவும். சுவைக்காக, சிறிது தேன் சேர்த்துக்கொள்ளுங்கள். இதைக் குழந்தைக்கு கொடுத்தாலும் வாந்தி, குமட்டல் பிரச்னை இருக்காது.
வயிற்றின் இயக்கத்தை சீராக்குவதில் பட்டை சிறந்தது. குமட்டல், வாந்தி ஆகிய தொல்லைகளை நீக்கும். பட்டை டீ தயாரிக்க, ஓரு டம்ளர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் பட்டை தூள் போட்டு, கொதிக்க விட்டு நிறுத்தி விடலாம். இதைக் குடிக்க வாந்தி, குமட்டல் இருக்காது.
அரிசி வடித்த கஞ்சி தண்ணீரைக் குழந்தைகளுக்கு கொடுக்க வாந்தி, குமட்டல் நிற்கும்.
ஏலம் விதைகளுடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து அரைத்து, அந்த பவுடரை சிறிதளவு குழந்தைகளுக்கு கொடுக்க வாந்தி, குமட்டல் பிரச்னை இருக்காது.
பட்டை டீ தயாரித்தது போலவே கிராம்பு டீ தயாரித்து, சுவைக்குத் தேன் கலந்து குழந்தைக்கு கொடுக்கலாம்.
பட்டை டீ, கிராம்பு டீ போல சோம்பு டீ தயாரித்து வைத்துக் கொள்ளவும். ஒரு நாளைக்கு 4-5 வேளை ஒரு டேபிள் ஸ்பூன் அளவுக்கு குழந்தைகளுக்கு கொடுத்து வரலாம்.
ஒரு ஸ்பூன் வெங்காய சாறு, ஒரு ஸ்பூன் இஞ்சி சாறு. இதனுடன் தேன் கலந்து ஒரு நாளைக்கு 3 முறை கொடுக்கலாம். வாந்தி, குமட்டல் தொல்லை வராது.
சீரகத்தை வறுத்து பவுடராக்கி கொள்ளுங்கள். குழந்தைக்கு குமட்டல், வாந்தி வருவது போல பிரச்னை இருக்கும் போது, சூடான ஒரு டம்ளர் தண்ணீரில் சீரக பவுடரைக் கலந்து அந்தத் தண்ணீரை ஒரு ஸ்பூன் அளவுக்கு அரை மணி நேரம் இடைவெளி விட்டு கொடுத்து வாருங்கள். மேலும் சீரக பவுடருடன் ஒரு சிட்டிகை பட்டைத் தூள், தேன் குழைத்து ஒரு ஸ்பூன் அளவுக்கு குழந்தைக்கு தரலாம்.
இதையும் படிக்க: உணவு ஊட்டுவதில் உள்ள 8 முக்கிய பிரச்னைகள்… தீர்வு என்ன?