அத்தி
மரத்தில் செய்யப்பட்ட விஷ்ணு சிலை இன்றைக்கும் காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் திருக்குளத்தில் 12 வருடத்திற்கு தரிசனத்திற்கு வெளியே கொண்டு
வரப்படுகிறது. அப்படிப்பட்ட
அத்தி மரத்தினுடைய சிறப்பு பற்றி ஜோதிடப்படி பார்த்தாலும் அத்தி மரம் சுக்ரனுக்கு ஒப்பாக சொல்லப்பட்டிருக்கிறது. சுக்ராச்சாரி, சுக்ரனுடைய ஆதிபத்யம் பெற்ற மரம் அத்தி மரம். இந்த அத்தி மரம் மிகவும் வலிமையான மரம். சுக்ரனுடைய செயல்பாடு என்பது வித்தியாசமாக இருக்கிறது. சுக்ராச்சாரி நேரடியாக மோதமாட்டார்.
மறைந்து நின்று தாக்கக்கூடியவர் சுக்ராச்சாரி. அத்தி மரத்தில் காய்ப்பது மட்டும்தான் தெரியும். பூப்பதே தெரியாது. அதை அதிகமாகப் பார்க்க முடியாது. அதனால்தான் கண்டு காய் காய்க்கும் காணாமல் பூ பூக்கும் என்று பழமொழி உண்டு அதனால்தான் சுக்ரனுடைய அம்சமாக இந்த அத்தி மரம் விளங்குகிறது.
கணவன்,
மனைவி இடையே சண்டை, சச்சரவு, சிக்கல்கள் போன்று இருப்பவர்கள், சுக்ரன் நீச்சமாக, பகையாக இருப்பவர்கள், சுக்ரன் ஜாதகத்தில் கெட்டுப் போய்விடுதல் போன்றவற்றிற்கு நடைமுறைப் பரிகாரம் என்று பார்த்தால் ஒரு அத்தி மரத்தை நட்டு வளர்த்து பராமரித்தாலே அவர்களிடையே சண்டை, சச்சரவுகள் எல்லாம் நீங்கும். இனக்கமான சூழல் உருவாகும். தாம்பத்ய சிக்கல்கள் நீங்கும். அத்தி மரத்திலிருந்து வரக்கூடிய வைப்ரேஷன் என்று சொல்வோமே அது கணவன், மனைவி இடையே அன்யோன்யத்தைக் கொடுக்கும்.
அதனால்தான்
வாழ்க்கை வளம் பெறுவதற்கும், கணவன் மனைவிக்குள் நெருக்கம், கடைசி வரையில் ஒருவருக்கொருவர் மனப்பூர்வமாக விரும்பி விலகாமல் இருப்பதற்கும் ஒவ்வொரு வீட்டிலுமே அத்தி மரம் இருந்தால் மிகவும் விசேஷமாக இருக்கும். இதுபோன்ற வைப்ரேஷன்கள் அத்தி மரத்திற்கு உண்டு.
மேலும், அத்தி மரப் பலகையில் உட்கார்ந்து தியானம் செய்தால் பூமியினுடைய புவிஈர்ப்பு விசை நம்மை அதிகம் தாக்காமல் எந்த மந்திரத்தை உச்சரிக்கிறோமே அந்த மந்திரத்தினுடைய பலன் முழுமையாகக் கிடைக்கும். இதுபோன்ற அபார சக்தியும் அத்தி மரத்திற்கு உண்டு.