இன்று அரசியல் மிகவும் தாழ்ந்த நிலையில் இருக்கிறது. அரசியல்வாதிகள்
அதைவிட தாழ்ந்த நிலையில் இருக்கிறார்கள். இன்று மட்டுமல்ல காலகாலமாக
அரசியல்வாதிகள் அப்படித்தான் இருக்கிறார்கள். ஏனென்றால் அரசியல் அதிகாரத்தால்
நிரம்பியுள்ளது. ஒவ்வொரு அரசியல்வாதியும் தன்னை ஒரு ராணுவமாக எண்ணிக்கொள்கிறான்.
ஒவ்வொரு அரசியல்வாதியும் தன்னால் இந்த உலகை மாற்றிவிட முடியும் என்றும் தனக்காக
இந்த உலகம் படைக்கப்பட்டதாகவும் நம்புகிறான்.
இந்த உலகை
மாற்றுவதற்குப் பிறந்திருப்பதாக நினைக்கும் அரசியல்வாதியால் எப்போதும் மக்களுக்கு
மகிழ்ச்சியைக் கொடுக்க முடியாது. ஏனென்றால் அரசியலுக்கு இதயம் கிடையாது. அரசியல்
என்பது பாறையைப் போன்றது. அதில் எந்தவிதமான உணர்ச்சியோ, உயிரோட்டமோ இருக்காது.
பாறையில் எதுவும் முளைப்பதில்லை, அப்படித்தான் அரசியல்வாதி சிந்தனையில் எதுவும்
நல்லது நடப்பதில்லை.
அரசியல்
மனிதகுலத்துக்கு என்ன கொடுத்திருக்கிறது?
செங்கிஸ்கான், தாமூர்லேன், நாதீர்ஷா, அலெக்ஸாண்டர், நெப்போலியன், கொடுமைக்காரஇவான், ஜோசப் ஸ்டாலின், அட்லாப் ஹிட்லர், பெனிட்டோ, முஸோலினி, மாசேதுங், கடைசியில் ரோனால்டு ரீகன் என்று
இதயமற்றவர்களைத்தானேவழங்கியிருக்கிறது?
இவர்களெல்லாம் குற்றவாளிகள். மனித இதயமே இல்லாதவர்கள்.அவர்களுக்கு அதிகாரம் மாத்திரம் இல்லாமல் இருந்தால், அனைவரும் ஜெயிலில்இருக்கத் தகுதியுடையவர்கள். இப்படிப்பட்ட
அரசியல்வாதிகள் நிரம்பிய அரசியல் இதுவரை சாதித்தது என்ன? பல நூற்றாண்டுகளாக, அவைகள்மக்களை கொடுமைப் படுத்தியும், கொன்று குவித்தும்தானே வந்திருக்கிறது? உங்கள் சரித்திரத்தில், அழித்தல், கொலை செய்தல் தவிர வேறு என்னஇருக்கிறது?
சாதாரணமாக, ஓர் அரசியல்வாதியின் அடிப்படைக் கருத்து என்னவென்றால், எப்படியாவது தன்னுடைய அகங்காரத்தைப் பூர்த்தி செய்து கொள்ளவேண்டும். அடுத்து, தன் தாழ்வு மனப்பான்மையை மூடி மறைக்க வேண்டும். அதனால் அரசியல்வாதி, போர்களிலும், கலவரத்தைத் தூண்டுவதிலும்,எப்பொழுதும் அமைதியற்ற தன்மையிலும் தான் வாழுகிறான்.
அரசியல் முழுக்க முழுக்க அறிவுப் பூர்வமானது. வியாபார நோக்கம் கொண்டது. பயன்
கருதிச் செய்யப்படுவது. அது ஒருக்காலும், மனிதனை உயர்வான உணர்வு நிலைக்கு
அழைத்துச் செல்லாது.
அரசியல்வாதிகள் மனித
குலத்துக்கு தலைமை வகிக்க கொஞ்சமும் தகுதி இல்லாதவர்கள். அரசியல்வாதி மக்களுக்குத்
தலைமை வகிக்கிறான் என்றால், ஒரு நோயாளி, டாக்டரை அதிகாரம் செய்வதற்குச் சமம்.
இந்த உலகத்திலேயே தகுதியில்லாதவர்கள் வகிக்கும் பதவி, அரசியலைத்
தவிரவேறு எதிலும் இருக்க முடியாது.
மக்களின் ஓட்டுகளை
எதிர்பார்க்காத, தன் பார்வையை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்கும், எப்பொழுதும்
உண்மையைப் பேசும், மதத்தன்மை வாய்ந்தவர்களால்தான் அரசியலை, தீர்க்கதரிசனத்துடன்
நடத்திச் செல்ல முடியும். ஆனால், அப்படிப்பட்ட மனிதர்களை நாம் தேடினாலும்
அரசியலில் கண்டுபிடிக்க முடியாது.
புத்தர், ஜீசஸ், குரு
நானக், கபீர் போன்றவர்கள்தான் மண்ணின் மைந்தர்கள். அவர்கள்தான் மக்களுக்குத்
தலைமையேற்க சரியான நபர் என்கிறார். ஆனால், நமக்கு வாய்த்ததென்னவோ எடப்பாடி
பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம், ஸ்டாலின், ராமதாஸ் போன்ற அரசியல்வாதிகள்தான்.
நல்லவேளையாக, முன்கூட்டியே மரணம் அடைந்துவிட்டார் ஓஷோ