Tamil Tips
லைஃப் ஸ்டைல்

முடி உதிர்வை தடுக்க முடியலையா? கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்களை தெரிஞ்சிக்கோங்க!

சமஸ்கிருதத்தில் `கிருஷ்ண ஜீரகா’, `குஞ்சிகா’, `உபகுஞ்சிகா’, `உபகுஞ்சீரகா’ என்றும், ஆங்கிலத்தில் `Black cumin’, `Small Fennel’ என்றும், இந்தியில் `காலாஜீரா’, `கலோன்ஜி’ என்றும் சொல்வார்கள்.

`இறப்பைத் தவிர மற்ற எல்லா நோய்களையும் குணப்படுத்தக்கூடியது’ என்று இதைக் குறிப்பிட்டிருக்கிறார் நபிகள் நாயகம். யுனானி மருத்துவத்தில் கருஞ்சீரக எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. அரபு நாடுகளில் இதை உணவில் சேர்த்துப் பயன்படுத்துகிறார்கள். பைபிளிலும் கருஞ்சீரகத்தைப் பற்றியக் குறிப்பு இருக்கிறது. 

மருத்துவக் குணங்கள் நிறைந்த கருஞ்சீரகத்தின் விதையில் உள்ள `தைமோகுயினன்’ (Thymoquinone) என்ற வேதிப்பொருள் வேறு எந்தத் தாவரத்திலும் இல்லை. இது, நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது. 

இதில் உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்பு இருப்பதால், கெட்ட கொழுப்புக் குறைய உதவும். மேலும், அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், கால்சியம், இரும்புச்சத்து போன்றவையும் இதில் உள்ளன. 

சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடென்ட் ஆகச் செயல்படும் கருஞ்சீரகம், வீக்கம் தணிக்க உதவும். ஆஸ்துமா, சுவாசப் பிரச்னைகள் நெருங்காமல் உடலுக்கு எதிர்ப்பு சக்தியைத் தரும். இதயநோய், புற்றுநோய் போன்றவற்றைக் குணப்படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்ததாக கருஞ்சீரகம் கருதப்படுகிறது.

Thirukkural

இது எலும்பு மஜ்ஜை உற்பத்தியைச் சீராக்கி, புற்றுநோய்க் கட்டிகள் ஏற்படாதபடி பாதுகாக்கும். குறிப்பாக, கணையப் புற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது.

மிகச் சாதாரணமாகப் பலரையும் பாடாகப்படுத்தி வரும் மூக்கடைப்புக்கு இது நல்ல மருந்து. ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகப் பொடியை 50 மி.லி தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடாக்கி, அதில் இரண்டு சொட்டு மூக்கில்விட்டால் மூக்கடைப்பு விலகும்.

ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகப் பொடியை வெந்நீர், தேன் கலந்து பருகினால் சிறுநீரகக் கற்களும் பித்தப்பைக் கற்களும் கரையும். இதை காலை, மாலை இரண்டுவேளையும் சாப்பிட்டு வரவேண்டியது அவசியம். 

தொடர் இருமலால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகப் பொடியை, அரை டீஸ்பூன் அரைத்த பூண்டு விழுதுடன் தேன் சேர்த்துச் சாப்பிடலாம். இது நுரையீரலில் தேங்கியிருக்கும் சளியை அகற்றும். தோல் நோய்களுக்கும் கருஞ்சீரகம் நல்ல மருந்து.

கரப்பான், சொரியாசிஸ் உள்ளவர்கள் கருஞ்சீரகத்தைப் பொடியாக்கி தேய்த்துக் குளிக்கலாம். இதனால் நோயின் தீவிரம் குறையும்; அதனால் ஏற்பட்ட புண்களும் தழும்புகளும் மறையும். குளியல் பொடிகளில் இதைச் சேர்த்துப் பயன்படுத்தலாம். 

மாதவிடாய்க் கோளாறுகளின்போது அடிவயிறு கனமாகி, சிறுநீர் கழிக்கச் சிரமப்படும் பெண்களுக்கு இது நல்ல மருந்து. வறுத்துப் பொடித்த கருஞ்சீரகத்துடன் தேன் அல்லது கருப்பட்டி கலந்து, மாதவிடாய் தேதிக்கு 10 நாள்கள் முன்பிருந்தே ஒரு டேபிள்ஸ்பூன் சாப்பிடலாம். இது வயிற்று வலி, ரத்தப்போக்கு உள்ளிட்ட மாதவிடாய்ச் சிக்கல்களை சரி செய்யும்; வயிறு கனம் குறைந்து நன்றாகச் சிறுநீர் வெளியேற உதவும்.

பிரசவத்துக்குப் பின்னர் கர்ப்பப்பையில் சேரும் அழுக்கை நீக்க, ஒரு டேபிள்ஸ்பூன் கருஞ்சீரகப் பொடியுடன் பனைவெல்லம் சேர்த்துச் சாப்பிடலாம். குழந்தை பெற்ற மூன்றாவது நாளில் இருந்து காலை, மாலை என ஐந்து நாள்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும். இதேபோல் வெந்தயம் கால் கிலோ, ஓமம் 100 கிராம், கருஞ்சீரகம் 50 கிராம் எடுத்து கருக விடாமல் வறுத்துப் பொடியாக்க வேண்டும்.

இதை ஒரு டீஸ்பூன் அளவுக்கு எடுத்து, இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்க வேண்டும். இதைச் சாப்பிட்டதும் வேறு எந்த உணவும் சாப்பிடக் கூடாது. இப்படித் தொடர்ந்து செய்து வந்தால், உடலில் தேங்கியிருக்கும் அனைத்து நச்சுக்களும் மலம், சிறுநீர், வியர்வை மூலம் வெளியேறும்; தேவையற்ற கொழுப்பு நீங்கும்; ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு ரத்த ஓட்டம் சீராகும்.

பிரசவத்திற்கு பிறகான தலைமுடி கொட்டும் பிரச்சனை தீர

இன்று நிறைய பெண்களுக்குப் பிரசவத்திற்குப் பிறகு முடி அதிகமாகக் கொட்டுகின்றது. இவர்கள் கருஞ்சீரக விதை எண்ணெய்யைத் தலைக்கு தேய்த்துக் குளிக்கலாம். இவ்வாறு செய்வதால் தலைமுடி கொட்டும் பிரச்சனை சரியாகி முடி நன்றாக வளர்ச்சி அடையும்.

வயிற்று கோளாறுகள்

கருஞ்சீரகம் வயிற்றிலுள்ள வாயுத்தொல்லைகளை நீக்கும் திறன் கொண்டது. வயிற்றில் ஏற்படும் உப்புசம் மற்றும் இதர ஜீரணம் சம்பந்தமான பிரச்சனைகளை போக்குவதோடு மட்டுமில்லாமல் இரைப்பை மற்றும் ஈரலில் ஏற்படும் கிருமி தொற்றுகளையும் போக்கும் தன்மை கொண்டது.

சிறுநீரக கற்கள்

கருஞ்சீரகத்தை பொடி செய்துகொண்டு அதில் ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து வெந்நீரில் கலந்து, அதனுடன் சிறிது தேனும் கலக்கி பருகி வந்தால் சிறுநீரக கற்கள் மற்றும் பித்தப்பை கற்களை கரைத்து, அந்த உறுப்புகளின் செயல் திறனை அதிகரிக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி

கருஞ்சீரகத்தில் இருக்கும் இயற்கை ரசாயனம் சிறந்த நோய்யெதிர்ப்பு திறன் கொண்டதாக இருக்கிறது. மேலும் நாம் உண்ணும் உணவில் இருக்கும் கெட்டக்கொழுப்புகளை கரைத்து உடல்நலத்தை பாதுகாக்கிறது.

தோல் குறைபாடுகள்

கருஞ்சீரக பொடியை தினமும் குளிக்கும் போது உடலில் தேய்த்து குளிப்பதால் சோரியாசிஸ் போன்ற தோல் சம்பந்தமான வியாதிகள் அனைத்தையும் நீக்கும். மேலும் தோலில் ஏற்பட்டிருக்கும் கரும்புள்ளிகள், தழும்புகள் போன்றவற்றையும் நீக்கும்.

சுவாச நோய்கள்

ஆஸ்துமா மற்றும் இருமல் சம்பந்தமான நோயால் அவதியுறுபவர்கள் கருஞ்சீரகத்தை பொடி செய்து, அதில் ஒரு டீஸ்பூன் எடுத்து தேன் மற்றும் அரை டீஸ்பூன் அரைத்த பூண்டு விழுதுடன் கலந்து சாப்பிட நல்ல நிவாரணம் கிடைக்கும்.

புற்று நோய் தடுப்பு

கருஞ்சீரக பொடியை தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் தேனுடன் குழைத்து சாப்பிட்டு வர புற்று நோய்கள் ஏற்படாமல் காக்கும். எலும்புகளுக்குள் இருக்கும் மஜ்ஜைகளை பலப்படுத்தி உடல் பலத்தை பெருக்கும்.

தலைமுடி உதிர்வை தடுக்க

தலை முடி உதிர்வதை தடுக்கலாம் கருஞ்சீரக எண்ணெயை தேங்காய் எண்ணெயோடு குறைந்த தீயில் காய்ச்சி அதை ஆறவைத்து, வாரம் 3 நாட்கள் இந்த எண்ணெயை தலையில் அரைமணி நேரம் ஊறவிட்டு தலைக்கு குளித்து வந்தால் முடி உதிர்வதை தடுக்கலாம்.

உடலில் சேர்ந்துள்ள கெட்ட ரசாயனங்களை அகற்றுதல்

இன்று பல்வேறு கலப்படமான பொருட்களின் மூலம் நம் உடலில் பல ரசாயனங்கள் கலந்து சேர்ந்து விடுகின்றன. இந்த கழிவுகள் இரத்தத்திலும் நுரையீரல்களிலும் காணப்படுகின்றன. இந்தப் பிரச்சினையில் சரியாக கருஞ்சீரகம் சிறப்பாக வழிகாட்டுகிறது. கருஞ்சீரகத்தைத் தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது. நுரையீரலில் சேர்ந்துள்ள கழிவுகள் நீங்குகின்றன.

விக்கல் நிற்க

விக்கல் ஒரு சில சமயம் தொடர்ந்து விடாமல் வந்தபடியே இருக்கும். தண்ணீருக்கும் வேறு எந்த விஷயத்திற்கும் கூட விக்கல் கட்டுப்படாது. அந்த சமயத்தில் கருஞ்சீரகம் உதவும். கருஞ்சீரகத்தை மோரில் கலந்து குடித்தால் தொடர்ந்து நிற்காமல் வரும் விக்கல் கூட நின்று விடும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

சென்னையில் ஆர்டர் – ராஜஸ்தானில் இருந்து டெலிவரிக்கு புறப்பட்ட ஸ்விக்கி பாய்!

tamiltips

வந்துவிட்டது கோடைக் காலம்! சமாளிக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

tamiltips

படித்தது 3ம் வகுப்பு! ஆனால் கண்டுபிடித்தது படுத்த படுக்கையாக இருப்பவர்களுக்கான அற்புதம்!

tamiltips

குழந்தைகளுக்கு சப்ஜா விதைகளுடன் வீட்டிலேயே ஐஸ்க்ரீம் செய்துகொடுங்கள்… எடையைக் குறைக்கும், இரும்புச் சத்துக்களும் கிடைக்கும்.

tamiltips

வெயில் நேரத்தில் முகம் கருப்பாக இல்லாமல் பளீச் பெற வேண்டுமா?

tamiltips

தொண்டைப் புண்ணுக்கு எலுமிச்சை சாறு..நறுமணம்மிக்க எலுமிச்சையின் மற்ற குணநலன்களை படிங்க..

tamiltips