முன்கூட்டியே ஒருவருக்கு விந்து வெளியேற முதன்மை காரணமாக, மன இறுக்கம் மற்றும் பதற்றம் போன்றவற்றை மருத்துவர்கள் காரணம் காட்டுகின்றனர். இதுதவிர ஏதேனும் ஹார்மோன் கோளாறு, மருந்து, மாத்திரை சாப்பிடுவதன்
பக்க விளைவு மற்றும் விறைப்புத்தன்மை பிரச்னை உள்ளிட்டவை காரணமாகவும், உடலுறவின்போது
முன்கூட்டியே ஒருவருக்கு விந்து வெளியேற வாய்ப்புள்ளது.
இந்த பிரச்னையை சரிசெய்ய நீங்கள் செய்ய வேண்டிய விசயங்கள் பற்றி கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.
1. பாதாம் பருப்பை 10 எண்ணிக்கையில் முதல் நாள் இரவு நீரில் ஊறவைக்க வேண்டும். அடுத்த நாள் காலையில்,
அதன் தோலை நீக்கிவிட்டு, மிக்ஸியில் போட்டு, அதனுடன் 1 கப் பால் சேர்த்து நன்கு அரைக்கவும். பிறகு, குங்குமப்பூ, இஞ்சி மற்றும் ஏலக்காய் சேர்த்துக் கொண்டால், சுவையான பானம் ரெடி. இதனை தினசரி காலையில் குடித்தால் விந்து வெளியேறுவதில் நீங்கள் நீண்ட நேரம் தாக்குப்பிடித்து, செக்ஸில் கில்லி
விளையாட முடியும்.
2. அஸ்வகந்தா, பாலா, விதாரி போன்ற ஆயுர்வேத மூலிகைப் பொடிகளை வாங்கி, சரிசம
அளவில் க்லந்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு டம்ளர் இளஞ்சூடான ஆட்டுப் பாலில், இந்த கலவையை
சிறிதளவு கலந்து குடித்தால், முன்கூட்டியே விந்து வெளியேறும் பிரச்னை ஓடிப் போய்விடும். ஆட்டுப் பால்,
ஆர்கானிக் முறையில் விளைந்த உணவுப் பொருட்கள் விற்கும் கடைகளில் தற்போது ஆட்டுப்பாலும் விற்கப்படுவதால்,
இதைச் செய்வது எளிது.
3. ஒரு டம்ளர் பாலை கொதிக்க வைத்து, 1 தேக்கரண்டி தேன், இஞ்சியை நசுக்கி சிறிதளவு கலந்து அதனை
தினசரி பருக வேண்டும். இதனால், உங்களின் முன்கூட்டியே விந்து வெளியேறும் பிரச்னை சரியாகிவிடும்.
4. தினசரி சாப்பிடும் முன்பாக, ஒரு தேக்கரண்டி வெங்காய விதைகளை ஒரு டம்ளர் நீரில் கலந்து,
குடிக்க வேண்டும். இப்படிச் செய்வதால், செக்ஸ் உறவில் நீடித்துச் செயல்பட முடியும்.
5. பாலுணர்வை அதிகளவில் தூண்டக்கூடிய பொருட்களில் முக்கியமானது குங்குமப்பூ. இதனை தினசரி
பாலில் கலந்து குடித்து வந்தால், குதிரை போன்ற ஆண்மை சக்தி கிடைக்கும். செக்ஸில் நீடித்து செயல்பட்டு,
உங்கள் இணையை மகிழ்விக்க முடியும்.
6. வாழைப்பழம், சோம்பு, கேரட் போன்ற உணவுப் பொருட்களை தினசரி, சாப்பிடுவது நல்லது. இதன்மூலம்,
இயற்கையாகவே உங்களின் உடல் இயங்குதன்மை சீர்செய்யப்பட்டு, முன்கூட்டியே விந்து வெளியேறும்
பிரச்னை கட்டுப்படுத்தப்படுகிறது.
7. நன்கு கொதிக்க வைத்த பாலில் சிறிதளவு அஸ்பாரகஸ் வேர்ப் பொடியை கலந்து, தினசரி குடிப்பதால்,
செக்ஸ் உறவில், நீடித்துச் செயல்படலாம்.
8. ஆயுர்வேத மருத்துவங்களில் குறிப்பிடுவதுபோல, உலர் பழ வகைகள், நட்ஸ், இஞ்சி, லெட்யூஸ், செரில்கள்,
மீன், காய்கறிகள் (செலரி, வெங்காயம்), தேன் போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால்
பாலியல் பிரச்னை எதுவும் ஏற்படாமல் தவிர்க்க முடியும்.
9. ஆண்களிடையே உள்ள பிரச்னைகளில் முன்கூட்டியே விந்து வெளியேறுவது முதல் பிரச்னையாகும். இதற்கு,
ஆல்கஹால், டீ, காபி, பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை அல்லது மைதா நிறைந்த உணவுகளை சாப்பிடாமல்
இருப்பது நல்ல பலன் தரும்.