ஸ்மார்ட்ஃபோன்களில் வருகையால், யாரை பார்த்தாலும் செல்ஃபி எடுப்பது, தவிர்க்க முடியாத விசயமாக மாறியுள்ளது. இந்நிலையில், கேரளாவில் உள்ள ஆலப்புழாவில் அரவக்காடு பகுதியில் ஸ்ரீதேவி கோயிலில் 2 யானைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த யானைகளுக்கு ஏதேனும் பழங்கள் கொடுத்தும், காசு கொடுத்தும் ஆசிர்வாதம் பெறுவது வழக்கமாகும். இந்நிலையில், இந்த 2 யானையில் ஒரு யானையின் அருகே நின்றபடி, இளைஞர் ஒருவர் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார். ஆனால், அவரை அந்த யானை தூக்கி வீசிவிட்டது.
அத்துடன் நிற்காமல், அந்த நபரை தாக்கிக் கொல்லவும் யானை முயற்சி செய்தது. இதை உடனடியாக, அங்கிருந்த பாகன் தடுத்து, அந்த நபரை காப்பாற்றியுள்ளார்.
உடனடியாக, காயம் அடைந்த நபரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த காட்சியை, ஒருவர் செல்ஃபோனில் வீடியோவாக படம்பிடித்து, சமூக ஊடகங்களில் பகிர, தற்போது அது வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.
Times of india பக்கத்தில் அந்த வீடியோ உள்ளது. தேவை என்றால் அங்கு சென்று பார்த்துக் கொள்ளலாம்.