பல்ஜீரியாவில் தனது ஆராய்ச்சி கட்டுரையை சமர்ப்பித்துள்ள ராச்சல் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார்.
பொதுவாக சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிட அனுமதிக்கபடுவதில்லை காரணம் அதன் இனிப்பு அவர்கள் சர்க்கரை அளவினை அதிகரிக்கும் என்பது தான்.
ஆனால் ராச்சல் ஆய்வுக்கட்டுரையின் மூலமாக இனி சர்க்கரை நோயாளிகள் கூட மாம்பழம் பயமில்லாமல் சாப்பிடலாம் என கூறுகிறார். ஏனெனில், மாம்பழத்தில் அதிகமாகபுள்ள மான்சி ஸ்பெரின் சர்க்கரை அளவை குறைக்கும் என அவரது ஆய்வு கட்டுரை குறிப்பிடுகிறது.
மேலும் மாம்பழம் இணை மருந்தாக எடுத்துக்கொண்டால் சீரான மற்றும் நேர்த்தியான பலன் கிடைப்பதாக நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக சர்க்கரை நோய்க்காக சிகிச்சை பெறுபவர்களுக்கு காலப்போக்கில் வரும் பக்க விளைவுகள் கூட இந்த முறையில் எடுத்துக் கொள்ளும் போது பயனளிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.மேலும் இதற்கான ஆய்வு கட்டுரைக்காக பலரும் பாராட்டு மழையை பொழிந்து வருகின்றனர்.