தம்பி, தங்கைகளுக்காக பாடுபட்டு உழைக்கும் அண்ணன்களின் கதையை திரைப்படங்களில் தான் அதிகளவில் பார்த்திருப்போம். பல இடங்களில் தம்பிகளுக்கு அண்ணன்கள் அப்பா ஸ்தானத்தில் இருந்து உதவுவதையும் பார்த்திருப்போம்.
பெற்றவர்களுக்கு பிள்ளைகள் மீது இருக்கும் பாசத்துக்கு சற்றும் குறைவில்லாததுதான் அண்ணன்_தம்பி, தங்கைகளுக்கு இடையேயான பாசமும்! பொதுவாகவே குழந்தைகளின் பாசத்தில் அன்புதான் பிரதானமாக இருக்கும். அவர்கள் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் மனதின் அடி ஆழத்தில் இருந்து பாசத்தைக் காட்டுவார்கள். அந்தவகையில் இங்கேயும் அப்படித்தான் ஒரு அண்ணன் தன் தம்பி, தங்கைகளோடு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டுக்கு அருகில் கொஞ்சமே, கொஞ்சமாகத் தண்ணீர் தேங்கிக் கிடந்தது.
இதைப் பார்த்த அண்ணன் அய்யோ தன் தம்பி, தங்கைகள் நனைந்து விடுவார்களே என்னும் பதட்டத்தில் அவர்களை உப்பு மூட்டையாக தூக்கிச் சென்று தண்ணீரைத் தாண்டி இறக்கிவிடுகிறார். அங்கேயே கொஞ்சமாகத்தான் தண்ணீர் கிடக்கிறது. ஆனாலும் தம்பி, தங்கையின் மீது பாசத்தோடு இந்த பொடியன் செய்த செயல் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. இதோ அந்த வீடியோ…நீங்களே பாருங்களேன்.
— Susanta Nanda IFS (@susantananda3) December 13, 2021