எல் அண்டி டி
குழுமத்தின் நிர்வாகத் தலைவராக இருந்த அனில் மணிபாய் நாயக் தான் அவர். எல் அண் டி
நிறுவனத்தில் 50 ஆண்டுகள் பணியாற்றிய நாயக், 2017-ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றபோது 55
கோடியே 38 ஆயிரம் ரூபாய் கிராஜுவிட்டியாக பெற்றார். ஓய்வூதியமாக 1கோடியே 50 லட்சம்
ரூபாய் பெறுகிறார்.
நிறுவனத்தை முதன்மை
நிலைக்கு கொண்டு வருதல், வெளிநாடுகளில் நிறுவனத்தின் முக்கியத்துவத்தை
அதிகரித்தல், ஊழியர்களின் பணித் திறனை மேம்படுத்துதல், பங்குச் சந்தை
முதலீட்டாளர்களுக்கான நன்மையை அதிகரித்து நம்பிக்கையை பெறுதல் உள்ளிட்ட பல்வேறு
துறைகளில் அவர் முக்கிய பங்காற்றியதாக நிறுவனத்தின் அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது தலைமையின் கீழ்
எல் அண்ட் டி நிறுவனம் பொறியியல் மற்றும் கட்டுமானத்துறைகளில் மட்டுமன்றி,
தொழில்நுட்பம், உற்பத்தி, நிதி உள்ளிட்ட துறைகள் சார்ந்த நிறுவனங்களை 30 நாடுகளில்
செயல்படுத்தி 1600 கோடி டாலர் மதிப்புள்ள பெரு நிறுவனமாக வளர்ந்ததாகவும்
கூறப்பட்டுள்ளது.
2017 செப்டம்பர் 30-ஆம்
தேதி ஓய்வு பெற்ற அவர் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் 3 ஆண்டுகளுக்கு நிறுவனத்தின்
கவுரவத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2009-ஆம் ஆண்டு
பத்மபூஷண் விருது பெற்ற அனில் மணிபாய் நாயக், 4 டாக்டர் பட்டங்கள் உள்ளிட்ட
பல்வேறு பட்டங்களை பெற்றுள்ளார். இவர் ஐ.ஐ.எம். நிறுவனத்தின் தலைவராகவும்
இருந்தவர்.