மிளகு வெப்ப மண்டல பயிர் என்பதால் தென்னிந்தியாவில்
அமோகமாக விளைகிறது. வால் மிளகு, மிளகு என இரண்டு வகையான மிளகு காணப்படுகின்றன. மிளகு
கொடியில் விளையும் சிறு பழங்கள் பறித்து, உலரவைத்து பதப்படுத்தப்படுகிறது. அதிக பயன்பாட்டில்
கருப்பு மிளகு இருந்தாலும் பதப்படுத்தும் தன்மைக்கேற்ப வெண் மிளகு, சிவப்பு மிளகு,
பச்சை மிளகு என மாற்றம் பெறுகிறது. வெளிநாடுகளில் அதிக மதிப்புமிக்க வாசனைப்பொருள்
என்பதால் கருப்புத் தங்கம் என்று அழைக்கப்படுகிறது.
மிளகில் என்ன இருக்கிறது?
வைட்டமின் ஏ, சி, கே, கரோட்டின், தயாமின் போன்ற வைட்டமின்கள்
மிளகில் நிரம்பியிருக்கின்றன. இதுதவிர கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், மாங்கனீஸ், பொட்டாசியம்
போன்ற தாத்து உப்புக்களும் மிளகில் உள்ளன. மிளகில் நார்ச்சத்தும் நிரம்பியுள்ளது.
மருத்துவ குணம் :
·
மிளகில் வைட்டமின் சி சத்து அதிகம்
இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
·
மிளகில் இருக்கும் பெப்பரின் பசியைத்
தூண்டுவதுடன் ஜீரணத் தன்மையையும் அதிகரிக்கிறது.
·
வயிற்றில் உள்ள வாயுவை அகற்றி உடலுக்கு
வெப்பம் தரும் தன்மை மிளகுக்கு உண்டு வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்ற பிரச்னைகளை
நீக்குகிறது. மேலும் உடலில் தங்கியிருக்கும் நச்சுக்கழிவுகளையும் வெளியேற்றுகிறது.
·
உடலில் ஏற்படும் வெண்புள்ளிகளை ஆரம்பகட்டத்திலேயே
கண்டறிந்தால், மிளகு அரைத்துப்போடுவது சிறந்த முறையில் பயன் தருகிறது.
·
இருமல், சளி உள்ளவர்கள் மிளகு சாப்பிட்டுவர
விரைவில் குணம் தெரியும்.
·
உடல் கொழுப்பை குறைக்கும் தன்மையும்
மிளகுக்கு உண்டு என்பதால் உடல் எடை குறைவதற்கும் காரணமாகிறது மிளகு.
ஒட்டுமொத்தமாக
உடல் நலனுக்கு மிளகு மிகுந்த பயன் தரக்கூடியது என்றாலும், வயிற்றில் புண் உள்ளவர்கள்
இதனை மிகவும் குறைவாகவே பயன்படுத்த வேண்டும்.