103 ஆண்டு காலம் பாரம்பரியம் கொண்ட காளிமார்க் குளிர்பான நிறுவனங்கள் ஏற்கனவே பொவண்டோ( bovonto )மற்றும் விப்ரோ ( Vibro) ஆகிய பெயர்களில் முன்னணி குளிர்பானங்களை விற்பனை செய்து வரும் நிலையில் தற்போது புதிய பிராண்டாக ஜிப்ஸி ( zypsy) என்ற பெயரில் சில உணவுப் பொருட்கள் மற்றும் பழரசங்கள் போன்றவற்றையும், இளநீர் (llani) என்ற பெயரில் சில இயற்கை பானங்கள் மற்றும் பவன்டோ என்ற பழைய பிராண்ட் பெயரிலேயே மேலும் சில புதிய குளிர்பானங்கள் என மொத்தம் 30 வகையான புதிய குளிர்பான மென்பொருட்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி சென்னை தேனாம்பேட்டையில் இருக்கக்கூடிய தனியார் ஹோட்டலில் நடைபெற்றது .
இந்த நிகழ்ச்சியில் திரைப்பட நடிகைகள் நிக்கி கல்ராணி அக்ஷரா ஹாசன் சமையல் கலை நிபுணர் முனைவர் தாமு ஆகியோர் கலந்துகொண்டு 30 வகையான புதிய பொருள்களை அறிமுகம் செய்து வைத்தனர். மேலும் காளிமார்க் குழுமம் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர் இதில் செய்தியாளர்களை சந்தித்த காளிமார்க் குழுமத்தின் நிர்வாக மேலாண்மை இயக்குனர் ரமேஷ் கூறும்போது
காளி மார்க் குழுமம் அறிமுகப்படுத்தியுள்ள பொருட்கள் அனைத்தும் 100% சுத்தமானது என்றும் நீண்ட நாள் கெடாமல் பாதுகாக்க சேர்க்கப்படும் ரசாயன பொருட்களையோ வானத்தின் நிறத்தை மாற்ற உதவும் விரும்பிகளும் இதில் எதுவும் சேர்க்கப்படாமல் சுத்தமாக விற்பனை செய்வதாகவும் தெரிவித்தார்