·
குழந்தையை தூக்கும் முன்பு பிரகாசமான விளக்கை போட்டுத்தான்
தூக்கவேண்டும்.
·
இரவு குழந்தை அழுதால் பாலுக்காக மட்டுமே அழுவதாக நினைக்கவேண்டாம்.
வியர்வை, சிறுநீர் போன்ற பிரச்னையாலும் இருக்கலாம்.
·
கொசு, கரப்பான் போன்ற ஏதேனும் பூச்சிகள் கடித்திருக்கிறதா
என்று பார்க்கவேண்டும்.
·
தூக்கக் கலக்கத்துடன் பால் கொடுக்கவேண்டாம். நிதானமாக
எழுந்து முகத்தை கழுவியபிறகு பால் கொடுக்க வேண்டும்.
அதேபோல் இருட்டு அல்லது விடிவிளக்கில் குழந்தைக்கு மருந்து
கொடுக்கவே கூடாது. பிரகாசமான விளக்கு போட்டு, சரியான மருந்துதான் கொடுக்கிறீர்களா
என்று பரிசோதனை செய்தபிறகே கொடுக்கவேண்டும். ஏனெனில் தூக்கக் கலக்கத்தில் வேறு
ஏதேனும் மருந்தை மாற்றிக் கொடுத்துவிடலாம்.
ஜொள்ளுவிடும் குழந்தைகள் ஏன்?
சின்னக் குழந்தைகளுக்கு எத்தனை உடை மாற்றினாலும் வாயில்
இருந்து எச்சில் வடிந்துகொண்டே இருக்கும். கழுத்தைச் சுற்றி பிரத்யேக துணியைக்
கட்டினாலும், அதைத்தாண்டி வடியும் எச்சிலை, ஜொள்ளு என்று சொல்வார்கள்.
·
நமது எச்சிலைப் போன்று இல்லாமல் குழந்தை வடிக்கும் ஜொள்ளு
கூடுதல் கெட்டித்தன்மையுடன் இருப்பது இயல்புதான்.
·
பெரியவர்களைப் போல் எச்சிலை விழுங்குவது குழந்தைக்குத்
தெரியாது என்பதால், வாயில் உருவாகும் எச்சில் ஜொள்ளாக வடிகிறது.
·
குழந்தையின் உடல் உறுப்புகள் வேகவேகமாக வளர்வதன்
அறிகுறியாகத்தான் எச்சில் வடிவதை எடுத்துக்கொள்ள வேண்டும்.
·
பற்கள் இல்லாத நிலையில் குழந்தை உட்கொள்ளும் பால் மற்றும்
பிற பொருட்களை செமிக்கும் தன்மை இந்த எச்சிலில் இருக்கும்.
அதிக ஜொள்ளு விடும் குழந்தைகள் வேகமாகப் பேசுவார்கள், நிறைய
ஜொள்ளுவிட்டால் சீக்கிரம் பல் முளைக்கும் என்று சொல்லப்படுவதெல்லாம் இன்னமும்
ஆய்வு மூலம் உறுதி செய்யப்படவில்லை.
பிறந்த குழந்தைக்கு சர்க்கரை
தண்ணீர் கொடுப்பது ஆபத்தா?
குழந்தை பிறப்பு என்பது தம்பதிக்கு மட்டுமின்றி
குடும்பத்திற்கே சந்தோஷம் தரக்கூடிய நிகழ்வு. அதனால் குழந்தை பிறந்த தகவல்
தெரிந்ததும் ஆளாளுக்கு வரிசையாக வந்து பார்ப்பார்கள். அன்பு மிகுதியால்
வருகிறார்கள் என்றாலும், இவர்களை முறைப்படுத்த வேண்டும்.
·
பிறந்த குழந்தைக்கு சர்க்கரை நீரை நாக்கில் வைப்பதை ஒரு
சடங்காக செய்வார்கள். இதனை நிச்சயம் தடுக்க வேண்டும்.
·
ஏனென்றால் குழந்தைக்கு சர்க்கரை தேவையில்லை. மேலும் சர்க்கரையில்
அல்லது கொடுப்பவர் கையின் மூலம் தொற்றுக் கிருமிகள் பரவுவதற்கு வாய்ப்பு உண்டு.
·
ஒருசிலர் தன்னுடைய ராசியான கையினால் காசு கொடுக்கவேண்டும்
என்று, பணம், காசு எடுத்து குழந்தையின் கையில் திணிப்பார்கள். இதுவும் தடுக்க
வேண்டிய செயலாகும்.
·
குழந்தையை பார்த்தவுடன் எடுத்து முத்தம் தருவதற்கு யாரையும்
அனுமதிக்கவே கூடாது.
முதல் சில மாதங்கள் குழந்தைக்கு எளிதில் தொற்றுநோய் தாக்கும்
அபாயம் உண்டு. அதனால் தாய், தந்தையைத் தவிர மற்றவர்கள் பச்சிளங் குழந்தையிடம்
இருந்து விலகி நிற்பது நல்லது.