இளம் தேங்காய் நீருக்காகவும், சற்றே வளர்ந்த தேங்காய் உண்பதற்காகவும் முதிர்ந்த தேங்காய் எண்ணெய் எடுக்கவும் பயன்படுகிறது. உலகிலேயே தேங்காய் உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
·
தாய்ப்பாலில் உள்ள புரதச் சத்துக்கு இணையாக இளநீரில் புரதச்சத்து உள்ளது. அதனால் குழந்தையில் இருந்து பெரியவர்கள் வரையிலும் இளநீர் குடிப்பது நல்லது.
·
தேங்காய்ப் பால் உடல் வலிமைக்கு நல்லது. தேங்காய் பாலை வாயில் கொஞ்சநேரம் வைத்திருந்து கொப்பளிப்பது வாய்ப்புண்ணுக்கு ஆறுதல் தரும்.
·
தேங்காய் எண்ணெய் தோல் நோய் தீர்க்கும் மருந்தாக பயன்படுகிறது. மேலும் தலைமுடி ஆரோக்கியமாக வளரவும், பொடுகு விரட்டவும் உதவுகிறது..
·
தேங்காயில் உடலுக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால் உடலின் வளர்சிதை மாற்றத்துக்குப் பெரிதும் உதவுகிறது.
இளநீரை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. அதேபோல் உடலில் கெட்ட கொழுப்பு அதிகமாக வைத்திருப்பவர்கள், தேங்காயை குறைவாகவே பயன்படுத்த வேண்டும்.