உலகின் மிகச்சிறந்த காலை உணவு எது என்ற பட்டியலில், இட்லி இடம்பிடித்துள்ளது. ஆவியில் வேகும் எளிமையான உணவு நம் இட்லி. இதில் அரிசி மற்றும் உளுத்தம்பருப்பை ஊறவைத்து அரைத்து மறுநாள் காலையில் இட்லி, தோசையாக சாப்பிடுகிறோம். இதில் தோசை எண்ணை சேர்த்து மெருகுவாக சுடுவதால் அது உடலுக்கு நல்லதில்லை. ஆனால் நீராவியில் வேகவைத்த இட்லி உடலுக்கு தீங்கு செய்யாத ஆரோக்கியமான உணவாகும்.
இதில் உடலுக்குத் தேவையான தாது உப்புக்கள், அமினோ அமிலங்கள் மற்றும் பல்வேறு நன்மைகள் உள்ளது. திசுக்களை புதுப்பிக்கும் லைசின் என்ற அமிலோ அமிலம் மூன்று மடங்கும், சிறுநீரக செயல்பாட்டிற்கு உதவும் காமா அமினோட்ரிக் 10 மடங்கும் அதிகரிக்கின்றன. தமிழ் இலக்கியங்களில் 17-ஆவது நூற்றாண்டு முதல் குறிப்பிடப்படுகிறது. இட்ரிகா என்ற சம்ஸ்கிருத பெயரே இட்லி என்றானது. 7-ஆவது நூற்றாண்டில் இந்தியா வந்த சீன பயணி ஹுவாங் சுவான் இந்தியாவில் உள்ள அனைத்தையும் பற்றி எழுதியுள்ளார். ஆனால் இட்லியை வேகவைக்க பயன்படுத்தும் இட்லி தட்டுகள் குறித்து அவர் குறிப்பேதும் தெரிவிக்கவில்லை.