பெரும்பாலான பெண்களின் அழகுக்கு காரணமாகவும், அழகின்மைக்கு காரணமாகவும் இருப்பது இந்த புருவங்கள்தான். அதனால்தான் சிலரது முகத்தில் விழிகளும் மூக்கும் இதழ்களும் பிரமாதமாய் அமைந்திருந்தாலும் ‘ஏதோ ஒன்று’ குறைவது போல் தோன்றும். புருவத்தை சரியாக அலங்கரிக்கப்பட வேண்டியது மிக அவசியம். முறையாக அலங்கரிக்கப்படாத புருவமும் அழகை மோசமாகவே காட்டும்.
அடர்த்தியாகத் தொடங்கி, கத்தி மாதிரி முடியும் புருவம் ஒரு பெண்ணுக்கு அழகாக இருந்தது. அதைப் பார்த்த அவள் தோழிகளும் அப்படியே அமைத்துக் கொண்டார்கள். ஆனால் முதலாமவருக்குக் கிடைத்த பாராட்டு மற்ற யாருக்கும் கிடைக்கவில்லை. ஏன்? அவளது முகத்தோற்றத்துக்குப் பொருந்திவிட்ட புருவ அமைப்பு மற்றவர்கள் முகத் தோற்றத்துக்கு ஏற்றதாக இல்லை. ஒவ்வொருவரின் முகத்துக்கும் ஏற்ப புருவ அலங்காரமும் மிகச்சரியாக இருக்க வேண்டும்.
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.