பீர்க்கங்காய் மசியல் அவற்றுள் ஒன்று மிகவும் சுவையானது. மற்ற மசியல் காய்களை போல் பீர்க்கங்காய் அரிப்பு தன்மை கிடையாது. மிகவும் மிருதுவான காய் பீர்க்கங்காய். நீர்ச்சத்து அதிகமுள்ள காய் பீர்க்கங்காய் ஆகையால் மிகவும் எளிதாகவும் சீக்கிரமாகவும் வெந்துவிடும்.
இன்று பீர்க்கங்காய் மசியல் தஞ்சாவூர் ஸ்டைலில் எப்படி செய்வது என்று பார்ப்போம்
தேவையான பொருட்கள் :-
– 1/2 கிலோ பீர்க்கங்காய்
– 2 பச்சை மிளகாய்
– 1 கரண்டி பயத்தம்பருப்பு
– 1 ஸ்பூன் பொடியாக நறுக்கிய இஞ்சி
– 1/2 மூடி எலுமிச்சம்பழம்
– கறிவேப்பிலை
– உப்பு தேவைக்கேற்ப
– 1/2 ஸ்பூன் மஞ்சள் பொடி
தாளிக்க :-
– 1 1/2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
– 1 ஸ்பூன் கடுகு
– 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
– 1 ஸ்பூன் கடலை பருப்பு
– 1/2 டீஸ்பூன் பெருங்காயம்
– கறிவேப்பிலை
செய்முறை :- அரைக்கிலோ பீர்க்கங்காயை தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பயத்தம் பருப்பை நன்கு அலசிப் அரைமணிநேரம் ஊறவைக்கவும். இஞ்சி பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக்கொண்டு, கறிவேப்பிலையும் எடுத்து வைத்துக்கொள்ளவும். வாணலியில் பயத்தம் பருப்பை போட்டு முக்கால் பதத்திற்கு வேகவிடவும்.
பயத்தம்பருப்பு வெந்தவுடன், நறுக்கி வைத்துள்ள பீர்க்கங்காய் போட்டு மஞ்சள் பொடி உப்பு போட்டு, கால் டம்ளர் அளவிற்கும் கம்மியாக தண்ணீர் விட்டு கலந்து, நறுக்கி வைத்துள்ள இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலையை சேர்த்து பிரட்டி, தட்டை போட்டு மூடி வேக வைக்கவும்.
மூன்று அல்லது நான்கு நிமிடம் கழித்து திறந்து பார்த்தாலே காய் நன்கு வெந்து இருக்கும், கரண்டியால் நன்கு கலந்தால் மசிந்து விடும். உப்பு அளவு சரி பார்த்து கேஸை அணைத்து, எலுமிச்சம் பழச்சாறை ஒரு நிமிடம் கழித்து கலக்கவும். ஒரு தாளிப்பு கரண்டியில் ஒன்றறை ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு காய்ந்த மிளகாய் பெருங்காயம் கறிவேப்பிலை தாளித்து மசியலில் கொட்டவும்.
அருமையான தஞ்சாவூர் பாரம்பரிய சமையல் ஆன பீர்க்கங்காய் மசியல் தயார்.
குறிப்பு : – எலுமிச்சை சாறை எந்த ஒரு ஐட்டத்திலும், குறிப்பாக சப்பாத்திக்கு செய்யும் சைட் டிஷ் மற்றும் மசியல்களில் சேர்த்தாலும் அதை கேஸ் ஆஃப் பண்ணி ஒரு நிமிடம் இரண்டு நிமிடம் கழித்து சேர்க்கவும். அடுப்பில் இருக்கும் போது சூட்டில் பிழியக்கூடாது.