உடல் எடையை குறைப்பதில் தண்ணீரின் பங்கு மிக முக்கியமானது. எனவே உணவுக்கு முன்னரே தண்ணீரை குடித்தால் பசி கட்டுப்படும் உணவும் குறைவாக எடுக்கும். இதனால் உடலுக்கு குறைந்த அளவு கலோரியே கிடைக்கும். தண்ணீரானது உடல் எடையை கட்டுக்குள் வைக்கும்.
தினமும் உபயோகிக்கும் சர்க்கரையின் அளவை குறைத்துக்கொள்வது உடலுக்கு நல்லது என்கின்றனர் நிபுணர்கள். ஏனெனில் நாம் எடுத்துக்கொள்ளும் சர்க்கரை உடலின் கலோரியை அதிகரிக்கிறதாம்.
ஜூஸ், மில்க்ஷேக் போன்றவற்றிர்க்கு சர்க்கரை உபயோகிக்காமல் பருகுவது உடல் எடையை குறைக்கும் என்பது நிபுணர்களின் அறிவுரை. அதேபோல் உப்பின் அளவையும் குறைத்தே உபயோகிக்க வேண்டும் என்பது அவர்களின் ஆலோசனையாகும்.
உடல் எடை குறைய முதலில் கவனம் செலுத்தவேண்டியது உணவு. அதுவும் சத்தான ராகி, கோதுமை, ஓட்ஸ் உள்ளிட்ட நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணவேண்டும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். இது உடலுக்கு தேவையான சத்துக்களை நீண்ட நேரம் எடுத்துக்கொள்வது பசி தூண்டும் உணர்வையும் கட்டுப்படுத்துகிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படும்.
உடல் எடையை குறைக்கிறேன் பேர்வழி என்று சத்தான உணவுகளை தவிர்க்க வேண்டாம். அது உடலின் பலத்தை குறைத்துவிடும். உடலின் திசுக்களுக்கு தேவையான புரதச்சத்து நிறைந்த உணவுகளை அவசியமான அளவில் உட்கொள்ள வேண்டும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். முட்டையின் வெள்ளைக்கரு தினமும் எடுத்துக்கொள்ளலாம். மஞ்சள் கருவை தவிர்த்து விடலாம். ஏனெனில் அதில் அதிக அளவு கொழுப்பு சத்து உள்ளது.
நம்முடைய உடலுக்கு தகுந்த உணவு எது என்பதை நாம் தேர்ந்தெடுத்து உண்ணவேண்டும். ருசிக்காக கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்பதை விடுத்து சத்தான உணவுகளை, குறைந்த கலோரி உள்ள உணவுகளை உண்ணவேண்டும் அப்பொழுதுதான் உடல் எடை எளிதாக குறையும். பாஸ்ட் புட் உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும் என்பது நிபுணர்களின் அறிவுரை.