துருக்கியை தாயகமாக கொண்ட கடுகு இப்போது உலகம் முழுவதும் விளைவிக்கப்படுகிறது. வெள்ளை, கருப்பு மற்றும் பழுப்பு நிறங்களில் கடுகு கிடைத்தாலும் கருப்பு கடுகே சமையலுக்கு நல்லது.
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதை அறிந்திருந்த காரணத்தால்தான் நம் முன்னோர்கள், இதனை அனைத்து வகையான குழம்புகளிலும் இடம்பெறச் செய்தார்கள்.
• உடலில் சேர்ந்துள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் குணமும் உடல் பருமனை குறைக்கும் ஆற்றலும் கடுகிற்கு உண்டு.
• கடுகில் இருக்கும் கால்சியம் எலும்பு ஆற்றலை அதிகரிக்கவும் மாங்கனீஸ் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாகவும் இருக்கிறது.
• விஷம் குடித்தவர்களுக்கு கடுகை நீர்விட்டு அரைத்துக்கொடுத்தால் உடனே வாந்தி ஏற்பட்டு நோயின் தாக்கம் குறையும்.
• மூட்டுவலி, வீக்கம் இருக்கும் இடங்களில் கடுகு அரைத்து பற்று போட்டால் உடனே நிவாரணம் கிடைக்கும்.
கடுகு எண்ணெய், கடுகுக்கீரை போன்றவையும் உடல் நலனுக்கு மிகவும் நன்மை பயக்கின்றன. அதனால் கடுகு இல்லாத உணவு வேண்டாமே.