என் குழந்தை சரியாகப் பால் குடிப்பதில்லை. என் குழந்தைக்கு 8 மாதம் ஆகிறது சரியாக உணவைச் சாப்பிடுவதில்லை. பள்ளி செல்லும் குழந்தைகள் லன்ச் பாக்ஸை அப்படியே திரும்ப கொண்டு வருகிறார்கள். இப்படி பலரும் தன் குழந்தை சரியாக சாப்பிடுவதில்லை எனப் புலம்புகிறார்கள்.
குழந்தை சாப்பிடவில்லை என்றால் அதற்கு பசி இல்லை. பசி குழந்தைக்கு வரவில்லை என்றால் என்ன காரணமாக குழந்தைக்கு பசி இல்லை என சிந்தியுங்கள்.
பசித்தால் குழந்தைகள் நிச்சயம் சாப்பிடுவார்கள். பசி வராமல் தடுப்பது என்ன? மாந்தம்தான்.
மாந்தத்தை சரி செய்யாமல் இருந்தால் குழந்தைக்கு பசி எடுக்காது. இதுவே, பல நோய்கள் வர காரணமாக அமைந்துவிடும். எனவே, கவனம்.
மாந்தம் பிரச்னைக்கான அறிகுறிகள்
- குழந்தையின் உடல் எடை குறைதல்
- குழந்தை நோஞ்சனாக இருத்தல்
- சீரணம் ஆகாமலே மலமாக வெளியாகுதல்
- நீர்த்த வயிற்றுப்போக்கு
- பசி இல்லாமல் இருத்தல் அல்லது மிகவும் குறைவாக பசி எடுத்தல்
- மலக்கட்டு
- குழந்தை மந்தமாக இருத்தல்
- எதை சாப்பிட்டாலும் உடம்பில் சேராமல் இருத்தல்
பசியைத் தூண்டும் வீட்டு மருத்துவம்
மாந்தம் நீங்க…
- வேப்பங்கொழுந்து
- மஞ்சள் துண்டு
- ஓமம்
ஆகியவற்றை சேர்த்து, அரைத்து ஒரு மிளகு அளவுக்கு உருட்டி, அதைத் தேனில் நனைத்து குழந்தைக்கு கொடுக்க வயிற்று புழுக்கள் நீங்கிவிடும். மாந்தம் சரியாகிவிடும். இதை 8 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைக்குக் கொடுக்கலாம்.
- தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் நிலக்கடலையைத் தவிர்க்கலாம். இதனால் குழந்தைக்கு மாந்தம் ஏற்படுவது தடுக்கப்படும்.
- சோயா, சோயா பால், சோயா தொடர்பான பொருட்களைத் தவிர்த்தால் குழந்தைகளுக்கு மாந்தம் ஏற்படாது. அதேசமயம் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களும் இதைத் தவிர்க்கலாம்.
- வெந்தயமும் பூண்டும் உணவில் அதிகமாக சேர்த்துக்கொண்டு தாய்ப்பால் கொடுக்க, தாய்ப்பால் வழியே இச்சத்துகள் குழந்தைக்கு போய் மாந்தம் சரியாகும். 0-6 மாத குழந்தைகளுக்கு இவ்வழி சிறந்தது.
- பழங்களை அதிகமாக குழந்தைகளும் தாய்ப்பால் ஊட்டுபவர்களும் சாப்பிட்டு வந்தாலே மாந்தம் பிரச்னை இருக்காது.
இதையும் படிக்க : தாய்ப்பால் தொடர்பான கேள்விகள், சந்தேகங்கள், அதற்கான பதில்கள்…
மாந்தத்தைத் தடுக்கும் முக்கியப் பொருட்கள்
Image Source : swarnaprashana.org
- குழந்தைக்கு கையில் வசம்பு வளையலை அணிந்து விடுங்கள்.
- குழந்தை விளையாட, வேங்கை மரத்தில் செய்த மரப்பாச்சி பொம்மையை விளையாடக் கொடுக்கலாம்.
குழந்தைக்கான பெஸ்ட் கஞ்சி ‘பஞ்சமூட்டக்கஞ்சி’
- ஐந்து பொருட்கள் கொண்டு செய்யப்படுவதால் இதற்கு பஞ்ச மூட்டக்கஞ்சி எனப் பெயர்.
- அரிசி, உளுந்து, பாசிப்பருப்பு, துவரம் பருப்பு, கடலப்பருப்பு. இவற்றை சம அளவில் எடுத்து நன்றாக வறுத்துக் கொள்ளுங்கள்.
- வெள்ளைத் துணியல் வறுத்தவற்றைக் கொட்டி தளர்வாகத் துணியை கட்டிக் கொள்ளுங்கள்.
- பருப்பு கடைகின்ற மத்தைப் பாத்திரத்தின் குறுக்கே வைத்து அதில் துணி மூட்டையைக் கட்டி கொள்ள வேண்டும்.
- பாத்திரத்தில் நீரை ஊற்றிக் கொதிக்கவிட வேண்டும்.
- துணி அடுப்பிலோ இண்டக்ஷன் ஸ்டவ்விலோ கீழே விழாமல் பார்த்துக் கொள்ளவும்.
- பருப்புகள் இருக்கும் துணி மூட்டைக் கொதிக்கும் நீரிலே மூழ்கி இருக்க வேண்டும்.
- பருப்புகள் நன்கு வேகட்டும்.
- நன்கு வெந்து, சாறு, சத்துகள் இறங்கி இருக்கும்.
- பிறகு அந்த வெள்ளை மூட்டையை எடுத்து விடலாம்.
- இந்தக் கஞ்சி குழந்தைக்கு மிகவும் நல்லது.
- மாந்த பிரச்னைகள் சரி செய்யும்.
- உடலுக்கு ஊட்டம் தரும் கஞ்சி.
- உடல் எடையையும் அதிகரிக்க உதவும்.
- 7 மாத குழந்தைகள் முதல் இதைக் கொடுக்கலாம்.
இதையும் படிக்க: ஊட்டச்சத்துக் குறைபாடுக்கான 8 காரணங்கள்… அதன் பின்விளைவுகள்…
நேந்திரப்பழ கஞ்சி
Image Source : healthyliving.natureloc.com
- நேந்திர வாழைக்காயை வாங்கித் தோல் நீக்கவும்.
- தோல் நீக்கயவுடன் சிறு சிறு துண்டுகளாக அறிந்து கொண்டு வெயிலில் உலர்த்திக் காய வைக்க வேண்டும்.
- நன்கு காய்ந்தது அதைப் பொடியாக்கி, அதில் சிறிது சுக்கு சேர்த்து, கஞ்சி காய்ச்சுவது போலத் தயாரிக்க வேண்டும்.
- அவ்வளவுதான். நேந்திரம் பழக்கஞ்சி ரெடி.
- குழந்தைக்கு மிகவும் நல்லது.
பசியைத் தூண்டும் பொடி
- சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய், சீரகம் ஆகிய ஐந்தும் சம அளவில் எடுத்துக் கொள்ளவும்.
- சுக்கை மேல் தோல் நீக்கி, லேசாகப் பொன் நிறமாக வறுக்க வேண்டும்.
- இதை அனைத்தையும் நன்றாக சேர்த்துப் பொடித்துக் கொள்ளுங்கள்.
- இந்தப் பொடி அளவுக்கே ஆர்கானிக் வெல்லம் இருந்தால், அதை சேர்த்துக் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- அவ்வளவுதான்… பசியைத் தூண்டும் பொடி ரெடி.
- குழந்தைகளின் காலை உணவுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன், அரை டீஸ்பூன் இந்தப் பொடி எடுத்து, தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
- வெல்லம், தேன் இருப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
- பசியும் எடுக்கும். குழந்தைகள் அடம் பிடிக்காமல் சாப்பிடுவார்கள்.
- 7 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
- பள்ளி செல்லும் குழந்தைகளுக்குகூட ஏற்றது.
மாந்தத்தால் அவதிப்பட்ட குழந்தைகளுக்கு உடல் எடை அதிகரிக்க…
Image Source : padhuskitchen.com
- வாரத்தில் 3-4 நாட்களுக்கு கீரை சாதம் கொடுக்கலாம்.
- ஆர்கானிக் பாலால் தயாரித்த மோரை சாதத்தில் கலக்கிக் கொடுக்கலாம்.
- வீட்டிலே தயாரித்த கொழுக்கட்டைகள் பெஸ்ட்.
- கருப்பட்டி சேர்க்கப்பட்ட சோள பணியாரத்தை வீட்டிலே செய்து தரலாம்.
- மீன் உணவுகள் நல்லது. மீனைப் பொரிக்க கூடாது. குழம்பு மீன் அல்லது கொஞ்சமாக எண்ணெய் விட்டு வறுத்த மீன் கொடுக்கலாம்.
- சுறா புட்டு நல்லது.
- வீட்டிலே செய்த பால் கொழுக்கட்டை மிகவும் நல்லது.
- ராகி உருண்டை செய்து கொடுக்கலாம்.
இதையும் படிக்க: குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தைத் தரும் 13 உணவுகள்
தவிர்க்க வேண்டியவை
- தாய்ப்பால் கொடுப்பவர்களும் குழந்தைகளும் கடையில் விற்கும் மில்க் ஸ்வீட் போன்ற எந்த இனிப்பையும் சாப்பிட கொடுக்க வேண்டாம்.
- இவை பசியை அடக்கிவிடும்.
- பாக்கெட் உணவுகள், சிப்ஸ் வகைகளை முற்றிலும் தவிர்க்கலாம்.
- ரெடி டூ ஈட் உணவுகள் வேண்டவே வேண்டாம்.
இதையும் படிக்க: குழந்தைகளுக்கு தரக்கூடாத 10 உணவு வகைகள்