இதற்கான வீட்டிலேயே செய்ய கூடிய இயற்கை மருத்து குணங்கள் கொண்ட முறைகளை எளிதாக தயார் செய்யலாம். காய்ச்சாத பால், சிறந்த ஆண்டி-டானிங் குணமுடையது. வெயில் பட்ட மேனிக்கு, கரு நிறத்தை போக்கக்கூடியது. காய்ச்சாத பால், தக்காளி சாறு ஆகியவற்றை சேர்த்து உபயோகித்து வந்தால், வீட்டிலேயே டான் பிரச்சைகளை தீர்க்கலாம்
காய்ச்சாத பாலுடன் பயத்தம் பருப்பு சேர்த்து அரைத்து வைக்க வேண்டும். முகத்தில் தேய்த்து 10 நிமிடங்கள் விடவும். 4-5 நிமிடங்களுக்கு தேய்த்த பின் முகத்தை கழுவ வேண்டும்.
பாதாம் – 6, பேரிச்சம்பழம் – 6 இவற்றை காய்ச்சாத பாலில் ஒரு மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும். பிறகு, பாலில் உள்ள பொருட்களை அரைக்க வேண்டும். முகம், கழுத்து பகுதிகளில் தேய்த்துவிட்டு 15 முதல் 20 நிமிடங்கள் ஊற விடவும். முகத்தை தண்ணீரில் நனைத்தப்படி, 2-3 நிமிடங்களுக்கு அதே கலவையை கொண்டு தேய்க்க வேண்டும். சுத்தமான நீரினால் முகம், கழுத்து பகுதிகளை கழுவ வேண்டும்.