இதற்கு காரணம் உடலில் உஷ்ணம் இருப்பதுதான்.
இதை சரி செய்ய வெந்தயத்தை ஒரு ஸ்பூன் இரவில் ஊறவைத்து காலை எழுந்ததும் ஒரு டம்ளர் மோரில் அந்த வெந்தயத்தை போட்டு குடித்துவிடவேண்டும்.
இரவு நேரங்களில் வெண்ணையை உதட்டில் தடவிக் கொண்டு படுக்க வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் உதடு பழைய பொலிவுக்கு வந்து விடும்.
எலுமிச்சையை பிழிந்து அதன் சாற்றை எடுத்து தினமும் உதட்டில் தடவி வரலாம். அல்லது எலுமிச்சை பழத்தை மெல்லிதாக நறுக்கி அதில் சர்க்கரையை தூவி அதனை உங்கள் உதட்டின் மேல் வைத்து தேய்க்கவும். இது உதட்டில் உள்ள இறந்த செல்கள் மற்றும் கருமையை நீக்கி உதட்டை சிவப்பாகவும் மென்மையாகவும் வைக்கும். ஒரு வாரத்திற்கு தினமும் செய்து வரலாம்.
பாதாம் எண்ணெய் உதட்டின் கருமையை போக்கி மென்மையாக வைத்து கொள்ளும். இரவு தூங்க போகும் முன் உதட்டில் தடவி வரலாம். இத்துடன் எலுமிச்சை சாறு சேர்த்து தேய்த்து வந்தால் உதடு புத்துணர்ச்சி பெற்றிருக்கும்.