இக்காலத்தில் அதிகமான இளைஞர்களுக்கு இளநரை இருக்கிறது அவர்களுக்காக இந்த மருத்துவ பதிவு 40 வயதிற்குட்பட்டவர்களுக்கு மட்டும் பயனளிக்கும். கொட்டக்கரந்தை மூலிகை ஒரு காயகற்ப மூலிகை. அதனுடைய அதிகமான பயன் பற்றி அடுத்து விரிவாக பார்க்கலாம்.
பூக்காத இளம்கொட்டக்கரந்தை மூலிகையும் பூக்காத வெள்ளை பூ கரிசலாங்கண்ணி மூலிகையும் சமூலமாக எடுத்து நிழலில் காயவைத்து பொடிசெய்து மீண்டும் பாலில் பிட்டவியலாக செய்து வெயிலில் காய வைத்து பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும்
தினம் காலை மாலை இருவேளை அவரவருடைய கைக்கு ஐந்து விரலால் அள்ளும் அளவிற்கு சாப்பிடும் முன்பு பாலில் மூன்று மாதங்கள் சாப்பிட வேண்டும் கரிசலாங்கண்ணிச் சாறு 500 மில்லி சுத்தமான எள் எண்ணை 500 மில்லி எடுத்து பக்குவமாக மெழுகு பதத்தில் காய்ச்சி வடிகட்டி அந்த எண்ணையை தலைக்கு தேய்த்து வர வேண்டும்.இள நரை மற்றும் செம்பட்டை முடி மாறி முடி நன்றாக வளரும்.
மற்றும் அவர்களுக்கு மஞ்ச காமாலை நோய் வராது. சளி இருமல் வராது கொட்டக்கரந்தை மூலிகைக்கு எலும்பு மஜ்ஜைக்குள் உள்ள காய்சலை போக்கும் தன்மை உள்ளதால் எல்லாவிதமான சுரமும் அவர்களுக்கு வராது.