Tamil Tips
Love & Romance செய்திகள் பெண்கள் நலன் பெற்றோர் முக்கிய செய்திகள்

கருமையான உதடு… காரணங்கள் என்னென்ன? தீர்வுகள்…

முகத்தைப் பற்றி கவலைப்படுவோர் உதட்டைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. உதட்டைப் பராமரிப்பது, அழகுக்காக அல்ல. உங்களின் உடல்நிலையை அறிந்து கொள்ளுங்கள். உங்களது உதட்டுக்கு உடலில் உள்ள மண்ணீரலுக்கும் நிறையத் தொடர்பு உண்டு.

மண்ணீரல்தான் உடலுக்கான நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும் என அக்குபஞ்சர் மருத்துவம் சொல்கிறது. மண்ணீரல் பலவீனமாக இருந்தால் உதடு கருப்பாக இருக்கலாம்.

உதட்டால் தண்ணீரை வாய் வைத்துக் குடிப்பதுதான் சரி என்றும் அக்குபஞ்சர் மருத்துவம் கூறுகிறது. தண்ணீரைத் தூக்கி குடிக்கத் தேவையில்லை. தேவையான தண்ணீர் உடலுக்கு போதும் என்று உணர்த்துவது உதடுதான். எனவே, வாய் வைத்து குடிக்கும் பழக்கம் நல்லது. உதடு தண்ணீரால் நனைந்து, உடலுக்கு தண்ணீர் போதும் என்ற சமிக்ஞையை ஏற்படுத்த தண்ணீரை வாய் வைத்துக் குடியுங்கள் எனப் பல நிபுணர்களும் சொல்லி வருகிறார்கள்.

நோய் எதிர்ப்பு சக்தியை செக் செய்ய..

அடிக்கடி சளி, காய்ச்சல் என அவதிப்படுவோரின் உதட்டைப் பாருங்கள்.

அதிகம் தண்ணீர் அருந்தாதவர்கள் தங்களது உதட்டைப் பார்க்கவும்.

Thirukkural

நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவுகளை உண்டாலே கருமை நிற உதடு சரியாகும்.

உதடு கருப்பாக இருந்தால் என்ன அர்த்தம்?

மரபியல் காரணம்

ரத்தசோகை

அதிகமாக காபி, டீ குடிப்பது

ஈட்டிங் டிஸ்ஆர்டர்

லிப் மேக்கப்பை முறைப்படி நீக்காதது

போதிய நீர்ச்சத்து உடலில் இல்லாமை

பற்பசை அலர்ஜி

அலுமினியம், காப்பர், மெர்குரி போன்ற கெமிக்கல்களின் விளைவு

புகைப்பழக்கம்

சூரிய கதிர்களின் தாக்கம்

விட்டமின் குறைபாடு

அதிகமான இரும்புச்சத்து உடலில் இருப்பது

மருந்துகள்

ஹார்மோன் பிரச்னை

உதடு பராமரிப்பின்மை

ஆகிய காரணங்களால் உதடு கருப்பாகிறது. உதடுதானே கருப்பானால் என்ன என்று அலட்சியமாக இருக்க வேண்டும்.

கருப்பான உதடுக்கு பின் பல உடல்நல பிரச்னைகள் மறைந்து இருக்க கூடும். அதை சரிபார்த்து தங்கள் உடல்நலத்தை சரி செய்து கொள்ளுங்கள்.

இதையும் படிக்க: தாய்மார்களுக்கான ஸ்ட்ரெஸ்… விரட்ட சிம்பிள் வழிகள் இங்கே…

juices for healthy lips

Image Source : better me for life

உதட்டில் உள்ள கருமை நீங்க சத்தான உணவுகள்…

தினந்தோறும் கடைபிடிக்க வேண்டியவை

மாதுளை

திராட்சை

விட்டமின் சி உள்ள சிட்ரஸ் பழங்கள்

2-3 லிட்டர் தண்ணீர்

நீர் மோர்

இளநீர்

பசுநெய் கலந்த உணவுகள்

கீரைகள்

பழச்சாறுகள்

கருமை நீக்கும் இயற்கை ஸ்கரப்…

வாரத்துக்கு 3 நாள் லிப் ஸ்கரப் செய்வது நல்லது.

வெள்ளை சர்க்கரையை லேசாக பொடித்துக் கொள்ளுங்கள். அதாவது சர்க்கரை துகள்கள் இருக்க வேண்டும். அதுபோல. இதனுடன் காபி தூள் சேர்க்கவும். இதை உதட்டில் தடவி மசாஜ் செய்யுங்கள். குறைந்தது 5 நிமிடங்கள். பின்னர் கழுவி விட்டு தேய்காய் எண்ணெய் தடவலாம்.

இட்லி மாவு, தோசை மாவு தடவியும் ஸ்கரப் செய்யலாம்.

புளிச்ச கீரை சாறு, எலுமிச்சை சாறு, பொடித்த சர்க்கரை ஆகியவற்றை கலந்து விடவும். இதைக் கொண்டு ஸ்கரப் செய்யலாம்.

இதையும் படிக்க: ஒரே மாதத்தில் பளபளப்பான சருமம்… 10 புதுமையான இயற்கை சிகிச்சைகள்…

லிப் பாம், லிப்ஸ்டிக் வாங்கும் முன்…

பெட்ரோலியம் ஜெல்லி உதட்டுக்கு நல்லதல்ல.

தேங்காய் எண்ணெய், ஷியா பட்டர், கொகோ பட்டர், கற்றாழை, அவகேடோ கலந்த லிப் பாம் தேர்ந்தெடுக்கலாம்.

அடர்நிறங்களைத் தவிர்ப்பது நல்லது.

நல்ல தரமான, கெமிக்கல்கள் இல்லாத லிப்ஸ்டிக், லிப் பாம் பயன்படுத்தலாம்.

முடிந்தவரை லேசான நிறம் கொண்ட நியூட் லிப்ஸ்டிக்கை பயன்படுத்துங்கள்.

வீட்டில் இருக்கும்போது, தேங்காய் எண்ணெய், நெய், லிப் பாம் பயன்படுத்தலாம்.

நிறமில்லாத லிப் பாம் பயன்படுத்துங்கள்.

லிக்விட் லிப்ஸ் ஸ்டிக் உங்களது உதட்டை ட்ரையாக்கும். எனவே முடிந்தவரைத் தவிர்க்கலாம். அல்லது லிப் பாம் பயன்படுத்திய பின் லிக்விட் லிப்ஸ் ஸ்டிக் பயன்படுத்தலாம்.

இரவில் தூங்கும் முன்னர் அவசியம் நீங்கள் போட்ட லிப் மேக்கப்பை நீக்கிவிட்டு வெறும் தேங்காய் எண்ணெய் தடவிவிட்டு தூங்குவது நல்லது.

இதையும் படிக்க: 10 நாட்களில் கருவளையத்தை போக்கும் ஹோம்மேட் சிகிச்சைகள்…

எளிமையான வீட்டு வைத்தியங்கள்…

எண்ணெய் வைத்தியம்

நெய், தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய். இவை அனைத்தும் உதட்டுக்கு நல்லது.

பகலில், இரவில் இதை உதட்டில் தடவிக் கொள்ளுங்கள்.

எலுமிச்சை வைத்தியம்

ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து, உதட்டில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.

aloevera gel for lips

Image Source : Organic facts

கற்றாழை ஜெல்

இரவில் கற்றாழை ஜெல்லை உதட்டில் தடவலாம். அடுத்த நாள் கழுவி விடுங்கள். தொடர்ந்து செய்து வந்தால் பலன் கிடைக்கும்.

சாறு வைத்தியம்

வெள்ளரி சாறு, பீட்ரூட் சாறு, கேரட் சாறு, மாதுளை சாறு, கொத்தமல்லி கீரை சாறு ஆகியவற்றைத் தொடர்ந்து உதட்டில் தடவி வந்தாலும் விரைவில் பலன் கிடைக்கும்.

கிளசரின்

கிளசரினை பஞ்சில் நனைத்து உதட்டில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம்.

ரோஸ் வாட்டர்

இரவில் ரோஸ் வாட்டரை பஞ்சில் நனைத்து உதட்டில் தடவி மறுநாள் கழுவி விடலாம்.

ஐஸ் கியூப்

தினமும் ஒரு ஐஸ் கியூப் எடுத்து உதட்டில் தடவி மசாஜ் செய்யுங்கள். பீட்ரூட் சாறு, கேரட் சாறு, வெள்ளரி சாறு போன்றவற்றைகூட ஐஸ் கியூப்பாக்கி உதட்டில் தடவலாம்.

விட்டமின் இ காப்சூல்

ஒரு விட்டமின் இ காப்சூல் எடுத்து, அதன் எண்ணெயை உதட்டில் தடவி வருவதும் பலன் தரும்.

இதையும் படிக்க: 3 வாரத்திலே சரும அழகை தரும் 5 வகை ஹெர்பல் ஃபேஸ்வாஷ் பவுடர்…

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

நடிகை ராதாவின் மகள் 14 வயதில் நடிக்க வந்த துளசியா இது? க டும் அ திர்ச்சியில் ரசிகர்கள்.. இப்போ எப்படி ஆகிட்டாங்க பாருங்க.. தீ யாய் பரவும் புகைப்படம்..!!

tamiltips

வயசு 35 ஆச்சு கிட்டத்தட்ட ஆண்டி ஆகிட்டேன்… ஆனாலும் ஹீரோயினா மட்டும் தான் நடிப்பேன்…! அடம்பிடிக்கும் பிரபல நடிகை…!! வெளிவந்த புகைப்படம்…!! உறைந்துபோன ரசிகர்கள்…!!!

tamiltips

இளம் நடிகர் திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன் வி பத்தில் சி க்கியுள்ளார்.. அ திர்ச்சியடைந்த குடும்பத்தினர்.. அவரது தற்போதைய நிலை என்ன தெரியுமா?

tamiltips

Nayanthara becomes mother photo’s- நயன்- விக்கி தம்பதிக்கு பிறந்த இரட்டை குழந்தைகள்

tamiltips

குழந்தைகளுக்கு உண்டாகும் மலச்சிக்கலைப் போக்கும் வீட்டு வைத்தியம்

tamiltips

ஆக்சன்கிங் அர்ஜூன் கையில் வைத்திருக்கும் இந்தப் பொடியன் யார் தெரியுமா ?? சமீபத்தில் இந்தியாவையே கலங்க வைத்து நம்மை விட்டு சென்ற சினிமா பிரபலம் !!

tamiltips