யூகலிப்டஸ் மற்றும் புதினா எண்ணெய்களின் கலவை சைனஸ் அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன . புதினா தேநீர் உடலுக்கு மிகுந்த நன்மைகளை வழங்குகிறது. சளி மற்றும் காய்ச்சலைத் தடுப்பதோடு மட்டுமல்லாமல், புதினா எண்ணெய் ஆற்றலை அதிகரிக்கும் பண்பை பெற்றிருக்கிறது
.
கற்பூரவள்ளி எண்ணெய் வலுவான ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. இது சுவாச நோய்களுக்கு சிகிச்சையளிக்க உதவும். கற்பூரவள்ளி செடியிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயை பயன்படுத்துவதால் நோய்க்கிருமிகளிடமிருந்து பாதுகாக்கப்படுவீர்கள். சூடோமோனாஸ் ஏருகினோசா என்பது ஒரு பாக்டீரியா வகையாகும். இது மனிதர்கள் உட்பட தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கு நோயை ஏற்படுத்தும். கற்பூரவள்ளி எண்ணெய் சுவாச நோய்களுக்கு வழிவகுக்கும் சில நோய்க்கிருமி பாக்டீரியாக்களை அழிக்க உதவுகிறது.
அரைக்கப்பட்ட தேயிலை மர இலைகளை உள்ளிழுப்பது பெரும்பாலும் இருமல் மற்றும் சளி நோய்க்கு சிகிச்சையளிக்கும் ஒரு முறையாக காலங்காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. தேயிலை மர எண்ணெய் பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை காளான் மற்றும் வைரஸ் தடுப்பு பாதுகாப்பை வழங்குகிறது என்று ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.