சாப்பிட்டு முடித்தப் பின் ஏப்பம் வருவதை திருப்தியாக சாப்பிடதன் அடையாளமாகத் தான் பலரும் கருதுகின்றனர். ஆனால், சிலருக்கு அடிக்கடி ஏப்பம் வரும். உடலில் காற்றின் அளவு அதிகமாக இருந்தால் ஏப்பம் வரும். இரைப்பையில் உள்ள காற்றுதான் ஏப்பமாக வருகிறது. இதுவே இந்த காற்றானது, குடலை அடைந்தால், வாய்வாக, மலவாயில் வழியாக வெளியேறும்.
புளித்த ஏப்பம் மற்றும் அதையொட்டி வரும் நெஞ்செரிச்சல், செரிமானக்கோளாறு போன்றவற்றை அன்றாடச் சமையலில் சேர்க்கும் இஞ்சி, கறிவேப்பிலை மற்றும் சில எளிய மூலிகைகள் மூலம் எளிதாகக் குணப்படுத்தலாம்.
இஞ்சியை தோல் நீக்கி சிறு துண்டுகளாக்கி அது மூழ்குமளவு எலுமிச்சைச்சாறு விட்டு தேவைக்கேற்ப இந்துப்பு சேர்த்து வெயிலில் நன்றாகக் காய வைக்க வேண்டும். நன்கு உலர்ந்த நிலையில் அந்த இஞ்சித்துண்டை எடுத்து வாயில் போட்டு சுவைத்து வந்தால் புளித்த ஏப்பத்திலிருந்து விடுதலை கிடைக்கும்.
டிக்கடி ஏப்பம் வரும் போது, ஒரு கப் புதினா டீ குடித்தால், ஏப்பம் வரும் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடலாம். வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து அதனுடன் இஞ்சி சாறுடன் கலந்து உட்கொள்ள வேண்டும். தினமும் ஒரு கப் சர்க்கரை சேர்க்காத எலுமிச்சை ஜூஸ் குடியுங்கள். இதனால் செரிமான பிரச்சனையுடன், ஏப்ப பிரச்சனையும் குணமாகும்.
சிட்ரஸ் பழங்கள் கூட ஏப்ப பிரச்சனைக்கு நல்ல நிவாரணத்தைக் கொடுக்கும். அதிலும் ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையை சாப்பிட்டால், அது வயிற்றில் உள்ள காற்று உடனே வெளியேற்றி, அடிக்கடி ஏப்பம் வருவதைத் தடுக்கும்.