24 வயதான வர்ஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் சமீபத்தில் அவரது காதலனுடன் ஒரு ஜாலிக்காக, உடலுறவு செய்ய முதல்முறையாக முயற்சித்துள்ளார். அது மிக மறக்க முடியாத
அனுபவமாக இருக்கும் என்று நினைத்து செக்ஸ் செய்ய தொடங்கிய இருவரும் போகப் போக,
அது மிகக் கஷ்டப்பட தொடங்கியுள்ளனர். குறிப்பாக, வர்ஷாவுக்கு, இடுப்பில் ஆயிரம் கத்திகள்
சொருகுவதுபோல கடும் வலி ஏற்பட்டிருக்கிறது. அந்த வலியுடனே, செக்ஸை முடித்துக் கொண்ட இருவரும்,
இதற்கு ஏதேனும் மருத்துவ காரணம் இருக்குமா என யோசித்துள்ளனர்.
இதன்பேரில், வர்ஷா, தனக்குத் தெரிந்த மருத்துவர் ஒருவரை சந்தித்து, ஆலோசனை கேட்டுள்ளார். ஆனால்,
வர்ஷா திருமணமாகாதவர் என்றவுடன் மருத்துவர் சிகிச்சை தர மறுத்துவிட்டாராம். எனவே, கூகுள் செய்து,
பார்த்ததில், பெண்களுக்கு வரக்கூடிய சதை அடைப்பு (vaginismus) வர்ஷாவிற்கு ஏற்பட்டிருப்பதாக, தெரியவந்திருக்கிறது.
பிறப்பு உறுப்பில் சதை வளர்ச்சி ஏற்பட்டு அடைத்துக் கொண்டிருப்பதால், பிறப்புறுப்பில்
மாதவிடாய் காலத்தில் பஞ்சு வைக்கவோ, பேட் வைக்கவோ முடியாமல் வர்ஷா அவதிப்பட்டிருக்கிறார். இதுதவிர,
உடலுறவின்போது ஆண்குறி அவரது பிறப்புறுப்பில் உள்ளே நுழைய முடியாத நிலை இருந்திருக்கிறது. அதுவே
அவருக்கு கடுமையான இடுப்பு வலியை கொடுத்திருப்பதாக, காரணம் தெரிந்திருக்கிறது.
இத்தகைய பாதிப்பு வர காரணம், சிறு வயதில் ஏதேனும் பாலியல் சித்வரதைக்கு ஆளாகியிருக்கலாம் அல்லது
உடலுறவு பற்றி தவறான அச்சம் ஏற்பட்டு, உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம், இதனால்,
படிப்படியாக சம்பந்தப்பட்ட பெண்ணின் இடுப்பு எலும்பு பகுதியில் தேவையற்ற சதை வளர்ச்சி ஏற்பட்டு,
அது கர்ப்பப்பையை சுற்றி பிறப்புறப்பின் துவாரத்தை கணிசமான அளவு அடைத்துக் கொள்ள நேரிடுகிறது.
இந்த பிரச்னையை தீர்க்க முதலில், உளவியல் ரீதியான சிகிச்சை அளிப்பது அவசியமாகும். அதன்பிறகே,
சதை வளர்ச்சிக்கு தகுந்த சிகிச்சை அளித்து நீக்க முடியும் என, வர்ஷாவுக்கு தற்போது சிகிச்சை அளித்து
வரும் தனியார் மருத்துவர் குறிப்பிடுகிறார்.
இதே கருத்தையே, பெங்களூருவில் உள்ள மதர்ஹூட் ஹாஸ்பிடலில் பணிபுரியும் டாக்டர் மஞ்சுளா பாட்டில்
வலியுறுத்துகிறார்.