நிலவேம்பு மூலிகை மூலம் பலவிதமான நோய்களை தீர்க்க முடியும்.தீராத காய்ச்சல், டெங்கு காய்ச்சல், மலேரியா காய்ச்சல், சிக்குன் குனியா காய்ச்சல், பன்றிக்காய்ச்சல், தோல் நோய், தலையில் நீர்க்கோர்வை, பித்தமயக்கம், மூட்டு, உடல் வலி மற்றும் பால்வினை நோய் உள்ளிட்ட பெரும்பாலான நோய்களை தீர்க்க முடியும்.
வெறும் நிலவேம்பு இலைகள் அல்லது அதன் வேர் அல்லது முழுத் தாவரத்தையும் கொதிக்க வைத்து குடித்து வந்தாலே காய்ச்சல் குணமாவதுடன் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். மேலும் கல்லீரல் தொடர்பான நோய்கள், பசி மந்தம், சொறி சிரங்கு போன்றவற்றைக் குணப்படுத்தும் சக்தி வாய்ந்தது தலையில் நீர் கட்டுதல், தலைவலி, தும்மல், இருமல் போன்றவற்றையும் குணப்படுத்தக்கூடியது. தைராய்டு, கர்ப்பப்பைக் கட்டிகளையும் நிலவேம்பு குணப்படுத்தும்.
நமது உடலுக்குள் இருக்கின்ற ரத்த ஓட்டத்திற்கும் சருமத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ரத்தத்தில் கலக்கின்றன நச்சுப் பொருட்கள் மற்றும் தொற்று கிருமிகளால் வெளிப்புறத் தோலில் சொறி, படர் தாமரை, சிரங்கு போன்றவை ஏற்படுகின்றது. நிலவேம்பு நமது ரத்தத்தில் கலந்துவிடுகிற நச்சுகள் மற்றும் கிருமிகளை நீக்கும் அரும்பணியை செய்கிறது. எனவே சரும ஆரோக்கியம் மேம்பட நினைப்பவர்கள் சரியான அளவில் நிலவேம்பு கசாயம் பருகுவது சிறந்தது.