பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடல் எடை குறையும். அதுமட்டுமின்றி, ஆண்கள் பூண்டு சாப்பிடுவது பாலியல் ஆரோக்கியத்திற்கு நல்லது.ஆய்வுகளில் பூண்டை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட்டால், அது சக்தி வாய்ந்த ஆன்டி-பயாடிக்காக செயல்படுவதாக தெரிய வந்துள்ளது.
பச்சை பூண்டு மன அழுத்தத்தையும் கட்டுப்படுத்த உதவும். எனவே அலுவலகத்தில் அதிக வேலைப்பளு இருப்பவர்கள், தினமும் பச்சை பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவது நல்லது.
இதய பிரச்சனைகளான ரத்தக்குழாய் அடைப்பு, ஹார்ட் ஹட்டாக், பை பாஸ் சர்ஜரி, ஓப்பன் ஹார்ட் சர்ஜரி, ஆன்ஜியோ கொடுமைகளில் இருந்து தப்பிக்க மற்றும் உடல் உறிஞ்ச தகுதியில்லாத கழிவாக தேங்கியுள்ள கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்ற மிக சிறந்தது.
இந்த பூண்டை சமைத்து சாப்பிடுவதை விட பச்சையாக மென்று சாப்பிட்டால், அதன் முழுமையான பலனையும் நாம் பெறலாம்.
மேலும் இந்த பூண்டானது, நமது உடம்பில் உள்ள ஆன்ஜியோடென்சின் என்னும் ஹார்மோன் உற்பத்தியைத் தடுத்து, ரத்த நாளங்களை ரிலாக்ஸ் அடையச் செய்கிறது.
இதய அடைப்பை நீக்கும், நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவைக் குறைக்கும், ஆண்களின் ஹார்மோன் உற்பத்தியை பெருக்கி, வீரியம் அதிகரிக்கச் செய்யும். பூண்டில் உள்ள ஈதர், நுரையீரல், நுரையீரல் குழாய் மற்றும் முகத்தில் அமைந்துள்ள சைனஸ் குழிகளில் படிந்திருக்கும் கெட்டியான சளியை இளக்கி வெளியேற்றி விடும். தொண்டை சதையை நீக்கும்.