* தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்
* மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்.
* நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.
* போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப்பழங்களை காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைக்க வேண்டும். அதன்பின் தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப்பிடலாம்.
* தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் உடல் கவர்ச்சிகரமாக வளரும். இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது. அத்திப் பட்டையை ஊற வைத்த நீரால் ஆறாத புண்ணைக் கழுவி வர, புண்கள் ஆறும்.
* அத்திப் பாலுடன் வெண்ணெய், சர்க்கரை கலந்து நான்கு மணிக்கு ஒரு முறை ஒரு ஸ்பூன் கொடுக்க சிறுநீரில் இரத்தம் போவது நிற்கும். இரத்த பேதி மாறும். வயிற்றுக் கோளாறுகள் கூட நீங்கும்.
* அத்தி விதைத்தூளில் நீர் கலந்து சாப்பிட நீரிழிவு நோய் குணமாகும்
* உலர் அத்திக்காயை பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட நோயுற்ற கல்லீரல் சீரடையும்.
* அத்திப் பிஞ்சை சமைத்து உண்டால் இரத்த மூலம் மற்றும் வயிற்றுப் போக்கு தீரும்.
* அத்திப் பழம் அஜீரணத்தை குணப்படுத்தும்.
* அத்திக்காயை அரைத்து, அரிசி கழுவிய நீருடன் பருகச் செய்தால் வெறிநாய் நஞ்சு நீங்கும்.
* அத்தித் தளிர் விதையை உண்டு வந்தால் விந்து கட்டுப்படும். அத்துடன் உடலுக்கு குளிர்ச்சியை தரும். பித்தம் நீங்கும்.
* அத்திக்காயை சமைத்து சாப்பிட்டால் பிரமேகம், வாதநோய்கள், சூலை தீரும்.
* வெந்தயக் கீரையுடன் அத்திப் பழத்தை சேர்த்து நன்றாக அரைத்து கட்டிகள் மீது தடவி வந்தால் விரைவில் கட்டிகள் உடைந்துவிடும்.
* உடம்பில் வீக்கம், வாதவலி உள்ள இடத்தில் அத்திப்பாலை தடவி வர வீக்கம், மூட்டு வலி மாறும்.
* அத்திப் பழத்தை நாள்தோறும் சாப்பிட்டு வந்தால் இருதயம் பலம் பெறும்.
* அத்திக்காயை உண்ண உதட்டில் வெடிப்புகள் இருந்தால் தீரும்
* அத்திப்பாலை மூட்டு வலிகளுக்கு பற்றிட வலி குறையும்.
பின்குறிப்பு : சிறுநீர் கல் உள்ளவர்கள் அத்திப் பழத்தை தவிர்க்கவும். எந்தவகையிலும் அத்தியை பயன்படுத்தக் கூடாது