·
உடலில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றும் திறன் கிரீன்
டீக்கு உண்டு என்பதை ஆய்வாளர்கள் ஆய்வின் மூலம் உறுதியளிக்கிறார்கள்.
·
உடல் கொழுப்பைக் கரைத்து உடல் பருமன் ஏற்படாமல் பாதுகாக்கும்
தன்மையும் கிரீன் டீக்கு உண்டு. தொப்பை குறையவும் உதவுகிறது.
·
நீரிழிவைக் கட்டுப்படுத்தும் தன்மை கிரீன் டீயில் உள்ளது
என்பதால் நீரிழிவு நோயாளிகள் அனைவரும் தாராளமாக பருகலாம்.
·
தோலில் சுருக்கம் ஏற்படாமல் தடுக்கும் தன்மை கிரீன் டீயில்
இருப்பதால், அழகு சாதனமாகவும் பயன்படுகிறது என்பது உண்மைதான்.
தூக்கம் வராமல் அவஸ்தையா… கத்திரிக்காய் சாப்பிடுங்க
கத்தரிக்காயில் ஏராளமான ஊட்டச்சத்துக்களும் நார்ச்சத்தும் நிறைந்திருக்கின்றன.
அதனால் உணவாக மட்டுமின்றி நோய் தீர்க்கும் மருந்தாகவும் செயல்படுகிறது.
·
கத்தரிக்காயை வேகவைத்து சாப்பிடுவது நல்ல தூக்கத்தை தரும்.
அத்துடன் இன்சோம்னியா என்னும் தூக்கமின்மை நோய் அகலும்.
·
கத்தரிக்காயை நெருப்பில் சுட்டு வேகவைத்து போதிய சர்க்கரை
சேர்த்து சாப்பிட மண்ணீரல் வீக்கம் குறையும்.
·
அடிக்கடி உணவில் சேர்ப்பதால் இதயம் மற்றும் ரத்த நாளங்களில்
ஏற்படும் நோய்கள் மற்றும் மாரடைப்பு தவிர்க்கப்படும்.
·
கத்தரிக்காயை சூப் செய்து சாப்பிட்டால் வயிற்றுவலி, உடல்
வலி, சோர்வு போன்றவை தீரும். கொழுப்பைக் கரைக்கும் தன்மையும் கத்திரிக்கு உண்டு.
பெண்களே, வெள்ளைப்படுகிறதா… சீரகம் இருக்க பயமெதற்கு?
சமையல் அறையில் சீரகத்துக்கு தனியிடம் உண்டு. வாசனைக்கு
மட்டுமின்றி உடல் நலன் பெறுவதற்காகவும் இதனை நம் முன்னோர் பயன்படுத்தியுள்ளனர்.
·
சீரகத்தை தண்ணீரில் ஊறவைத்து, அந்தத் தண்ணீரை தினமும்
காலையில் குடித்துவந்தால் வயிற்றுவலி, ரத்தமூலம், அல்சர் பிரச்னைகள் தீரும்.
·
நல்லெண்ணெய்யில் சீரகம்போட்டு காய்ச்சி, அந்த எண்ணெய்யை
தலைக்குத் தேய்த்துக் குளித்தால் பித்தம் தணியும்.
·
சீரகத்தை வறுத்து பொடியாக்கி, அத்துடன் கருப்பட்டி கலந்து
சாப்பிட்டுவர நரம்புத்தளர்ச்சி குணமாகும். நரம்புகள் பலப்படும்.
சீரகத்துடன் சின்ன வெங்காயம்
சேர்த்து அரைத்து எலுமிச்சை சாறில் கலந்து பருகினால் பெண்களுக்கு வெள்ளைப்படுதல் மற்றும்
மாதவிலக்கு சீரடையும்.