புத்தாண்டு தொடங்கியது முதலே தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வரும் நிலையில், கடந்த ஒரு வாரத்தில் கணிசமாகக் குறைந்தது வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தியாக உள்ளது. ஜனவரி 8ஆம் தேதி ஒரு சவரனுக்கு ரூ. 32,736/- ஆக இருந்த தங்கம் விலை இன்று ரூ.1120/- குறைந்து ஒரு சவரன் ரூ. 31616/- க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்றைய நிலவரப்படி ஆபரண தங்கத்தின் விலை 1 கிராமுக்கு ரூ. 3,971 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ. 31,768 ஆகவும், 22 கேரட் தங்கத்தின் விலையானது 1 கிராமுக்கு ரூ.3,782 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ. 30,256 ஆகவும் இருந்தது.
இன்று சவரனுக்கு ரூ. 152/- குறைந்து 22 கேரட் தங்கத்தின் விலையானது ஒரு கிராமுக்கு ரூ. 3,764 ஆகவும் ஒரு சவரன் தங்கத்தின் விலையானது ரூ.30,112 ஆகவும் இன்று விற்பனை செய்யப்படுகிறது.. அதேபோல் 24 கேரட் தங்கத்தின் விலையானது ஒரு கிராம் ரூ.3,952 ஆகவும் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 31,616 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்று சென்னையில் 22 கேரட் மற்றும் 24 கேரட் தங்கத்தின் விலை நிலவரம் கீழ்வருமாறு:
14.1.2020 – 1 grm – Rs. 3,952/-, 8 grm – 31,616/- ( 24 கேரட்)
14.1.2020 – 1 grm – Rs. 3,764/-, 8 grm – 30,112/- (22 கேரட்)
ரூ. 52,000/- ஐ தாண்டிய வெள்ளி விலையும் ஒரே வாரத்தில் ரூ. 2500/- குறைந்துள்ளது. வெள்ளி விலை இன்று கிராமுக்கு 49.70 ஆகவும் கிலோ ரூ.49,700 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது..