ஏராளமான மருத்துவ குணங்கள் நிரம்பியிருப்பதால் தினமும் ஏதேனும் ஒரு வகையில் நம் உணவில் இஞ்சியை சேர்த்துக்கொள்ளும்படி முன்னோர்கள் வலியுறுத்தினார்கள்.
· இஞ்சியில் இருக்கும் காம்ஃபின், ஜின்ஜிபெரி போன்றவை உடலுக்கு தெம்பும் நரம்புக்கு புத்துணர்வும் தரக்கூடியது.
· சாதாரண காய்ச்சல், இருமல், சளி போன்ற பிரச்னைகளுக்கு இஞ்சியை மருந்தாக பயன்படுத்தலாம் என்கிறது ஜப்பான் மருத்துவ ஆய்வு நிறுவனம்.
· இஞ்சியை தோல் நீக்கி அரைத்து சாறு எடுத்துக் குடித்தால் உணவு செரிமான பிரச்னைகள் தீரும். வாந்தி, குமட்டலுக்கு நல்லது.
· வயிற்றில் தொந்தி, குறட்டை பிரச்னை இருப்பவர்கள் இஞ்சியில் தேன் கலந்து குடித்துவந்தால் உடல் மெலிந்து நல்ல பலன் கிடைக்கும்.
தேவையில்லாத கொழுப்பை கரைக்கும் சக்தி இஞ்சிக்கு உண்டு. வாய்ப்புண், வயிற்றுப்புண் உள்ளவர்கள் இஞ்சியை தவிர்க்க வேண்டும்.