பெண்களின் பிறப்புறுப்பில் வரும் புற்றுநோய்க்கு, வல்வுல் எனப் பெயராகும். இது மிக அரிதான புற்றுநோயாகும். பிறப்புறப்பை தாக்கி, உயிரையே பறித்துவிடக்கூடியது. வுல்வா என்பது சிறுநீர் கழிக்கும் பகுதிக்கும், யோனி பகுதிக்கும் இடையே காணப்படும் ஒரு வகை சருமமாகும்.
இதில், மேற்கண்ட புற்றுநோய், பிறப்புறுப்பின் வெளிப்பகுதியை தாக்கக்கூடியதாகும். இது அப்படியே நிற்பதில்லை. படிப்படியாக வளர்ந்து, வுல்வாவை சுற்றி படர்ந்துவிடும். இது பார்ப்பதற்கு, கட்டி போல அல்லது புண் போல காணப்படும். அந்த பகுதி கடுமையாக அரிக்கும். சிலருக்கு மரு போலவும் பிறப்புறுப்பின் வெளிப்பகுதியில் ஏற்படும்.
இந்த அறிகுறிகளை பார்த்தால், உடனடியாக, மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நலம். உரிய சிகிச்சை பெறத் தவறினால், அதற்குள்ளாக, இந்த செல்கள் புற்றுநோய் கட்டிகளாக மாறிவிடும். எனவே, பிறப்புறுப்பில் ஏற்படும் அறிகுறிகளை பெண்கள், மிகக் கவனமாக கவனிக்க வேண்டும் என, நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.