பொதுவாக பொதுவாக மாதவிடாய் நாட்களில் உடலுறவில் ஈடுபடுவதை தவிர்ப்பதற்கு அந்த நாட்களில் பெண்கள் அதிக வலியுடன் காணப்படுவர். அப்போது செக்ஸ் வைத்துக் கொள்ள முயல்வது தவறு என்பதுதான்.
ஆனால், சில பெண்களுக்கு மாதவிடாய் நாட்களிலும் உடலுறவு வைத்துக் கொள்ள ஆர்வம் அதிகரிக்கும் என்றும் மாதவிடாய் இரத்தப்போக்குநாட்களில் உச்சக்கட்ட இன்பம் அடைய எண்ணம் எழும் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. ஆனால் அந்த சமயத்தில் இதுகுறித்து தெரிவித்தால் தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பார்கள் என்றும் அவமானமாக இருக்கும் என்பதால் யாரிடமும் பகிர்ந்துக் கொள்ளவில்லை என்றும் சில பெண்கள் கூறுகின்றனர்.
உயிரியல் ரீதியாகவே மாதவிடாய் நாட்களில் வெளிப்படும் சில ஹார்மோன் சுரப்பிகள் காரணமாக பெண்கள் மத்தியில் செக்ஸ் வைத்துக் கொள்ள ஆர்வம் வெளிப்படுவது இயற்கை. மாதவிடாய் நாட்களில் லியூப்ரிகேஷன் மிகுதியாக இருப்பதாலும். கருத்தரிக்கும் வாய்ப்புகள் குறைவு என்பதாலும் சிலருக்கு இந்த ஆர்வம் அதிகரிக்க காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது. மாதாவிடாய் நாட்களில் கருத்தரிக்க மிக அரிதான வாய்ப்புகள் உள்ளதால், பாதுகாப்புடன் உடலுறவில் ஈடுபட வேண்டும் என்றும் மாதவிடாய் நாட்களில் உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானது தான் என்றும் மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
பொதுவாக உடலுறவில் ஈடுபடும்போது ஈஸ்ட்ரோஜன், எண்டோர்பின் சுரப்பிகள் வலி நிவாரணியாக செயல்படுகின்றன. இதனால், மாதவிடாய் காலங்களில் ஏற்படும் Cramps வலிகளில் இருந்து பெண்களுக்கு நிவாரணம் கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளன.
மாதவிடாய் நாட்களில் உடலுறவில் ஈடுபடும்போது இரத்தக்கறை படியும் என்பதால் அந்தரங்க பாகத்தின் கீழே கூடுதலாக துணி ஒன்றை பயன்படுத்தலாம் என ஒருபெண்மணி கூறுகிறார்.
இன்னொரு பெண்மணி உடலுறவில் ஈடுபடுவதற்கு பதிலாக வைப்ரேட்டர் பயன்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளதாக கூறுகிறார். மாதவிடாய் நாட்களில் உடலுறவில் ஈடுபடுவதால் கருப்பை வாய்க்கான தொடர்பு இலகுவாகி, இரத்தப்போக்கு நாட்கள் குறையும். இதனால் மாதவிடாய் நாட்களும் குறைய வாய்ப்புகள் உள்ளன.