• இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுவதற்கும் குறைமாதக் குழந்தை மற்றும் எடை குறைவான குழந்தை பிறப்பதற்கும் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
• குழந்தையின் மூளை வளர்ச்சி குறைபாடு, நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடுக்கும் இரும்புச்சத்து குறைபாடு காரணமாக அமையலாம்.
• கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு இரண்டு மடங்கு இரும்புச்சத்து தேவைப்படுகிறது. அதனால் தினமும் 27 மில்லிகிராம் அளவுக்கு இரும்புச்சத்து எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
• உணவின் மூலம் இரும்புச்சத்து பெற்றுக்கொள்வதே மிகவும் சிறந்தது. மிகவும் ரத்தசோகையால் பாதிக்கப்பட்ட பெண்கள் மட்டும் கண்டிப்பாக மருத்துவர் ஆலோசனையில் மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
முருங்கைகீரை, அகத்திக்கீரை, பேரீச்சம் பழம், அத்திப்பழம் போன்றவற்றில் அதிகமான இரும்புச்சத்து இருக்கிறது முட்டை, மீன், ஆட்டு ஈரல் போன்றவற்றிலும் அதிகம் இரும்புச்சத்து உள்ளது. காபி, தேநீர் அதிகம் குடிப்பது இரும்புச்சத்து உறிஞ்சப்படுவதை தடுக்கும் என்பதால், கர்ப்பிணிகள் இவற்றை அருந்துவதை குறைத்துக்கொள்வது நல்லது.